குவைத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட கூத்தா நல்லூரைச் சேர்ந்த முத்துக்குமரன் நாளை தமிழகம் வந்தடைய அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரைச் சேர்ந்த முத்துக்குமரன் கடந்த செப்டம்பர் 3 ம் தேதி வேலைக்குச் சென்றார். இங்கிருந்து சென்றபோது நல்ல வேலை தருவதாக ஐதராபாத் நிறுவனம் குவைத்திற்கு முத்துக்குமாரை அனுப்பியுள்ளது. அங்கு சென்றபோதுதான் தெரிந்தது ஒட்டகத்தை பராமரிக்கும் வேலை என்று. .. இது பற்றி மனைவியிடம் பேசிய நிலையில் அந்த வேலையை இங்கேயே செய்யலாமே எனக் கூறி வந்துவிடுமாறு கேட்டுள்ளார்.
இந்த நிலையில் அவர் பின்னர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசவில்லை. அப்போது குவைத்தில் இருந்த வந்த ஒரு போன்காலில் கணவர் இறந்துவிட்டார் என தெரிவித்துள்ளார். பதறிப்போன குடும்பத்தினர் செய்வதறியாது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இதனிடையே முத்துக்குமரன் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாகவும் . அவரது உடலில் காயங்கள் இருந்ததாகவும் அவர் தாக்கப்பட்டு சுடப்பட்டு இருக்கலாம் என செய்தியில் தகவல் வெளியானது. மேலும் குவைத் விசாரணைக்குழுவும் இதே தகவலை வெளியிட்டுள்ளார்கள். இந்நிலையில் தமிழக அதிகாரிகள் நேரில் உடலை பார்த்து ஆய்வு செய்த பின்னர்தான் என்ன மாதிரியான காயங்கள் என தெரியவரும் என கூறியுள்ளனர்.
இந்நிலையில் முத்துக்குமரன் உடலை நாளை தமிழகம் கொண்டு வர மறுவாழ்வுத்துறை ஆணையரகம் மற்றும் அயலகத் தமிழர் நலன் நடவடிக்கை எடுத்துள்ளது . எனவே நாளை பிற்பகலில் முத்துக்குமரன்உடல் வருகின்றது.