ரயிலில் தூங்குவதற்கான விதிமுறையை மாற்றி ஐஆர்சிடிசி புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது
பயணத்தின் போது நீங்கள் ஒரு போதும் இந்த தவறை செய்துவிடாதீர்கள்.. சிறிய தவறு கூட பெரிய சிக்கலில் சிக்கிக் கொள்ள வேண்டியிருக்கும். அனைத்து பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு இந்திய ரயில்வே புதிய விதிமுறைகளை விதித்துள்ளது. இரவு நேரத்தில் பயணிகள் தூங்குவது பற்றிய அறிவிப்பை ஏற்கனவே ஐஆர்சிடிசி வெளியிட்டது பற்றி அனைவரும் அறிந்திருப்போம்..
சமீபத்தில் ரயில்வே நிர்வாகம் வெளியிட்டிருந்த புதிய விதிமுறையின்படி நீங்கள் அமர்ந்துள்ள இருக்கைக்கு அருகிலோ அல்லது ஒரே சீட்டிலோ அல்லது ஒரே கம்பார்ட்மென்டிலோ செல்போனில் அதிகமான சத்தத்தில் செல்போனில் பாட்டு கேட்க கூடாழது. பிறருக்கு இடையூறு ஏற்படும் வகையில் சத்தம் ஏற்படுத்தக்கூடது என்பது போன்ற விதிமுறைகளை வெளியிட்டது. தற்போது பயணிகள் நிம்மதியாக தூங்கும் வகையில் பிறர் எந்த வகையான இடையூறும் செய்யக்கூடாது என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பெரும்பாலான பயணிகள் இன்னும் பல்வேறு புகார்களை தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். செல்போனில் சக பயணிகள் சத்தமாக பேசிவருகின்றனர், இரவு 10ஐக் கடந்தும் பாடல்கள் கேட்கின்றனர். சக பயணிகளின் தூக்கம் கெடும் வகையில் மின்விளக்கை பயன்படுத்துகின்றனர்.என்பது போன்ற புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளது. எனவே இது குறித்தும் புதிய அறிவிப்பை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்த விதிகளை பயணிகள் பின்பற்றவில்லை என்றால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதிய விதிமுறைகள் – ரயில்வே நிர்வாகம் , பயணிகள் யாராவது 10 மணிக்கு மேல் சத்தமாக செல்போனில் பேசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. சத்தமாக பேசினாலோ , அதிக சத்தத்துடன் பாடல்கள் கேட்டாலோ நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. சக பயணிகள் தங்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாக புகார் அளித்தால் ரயில்வே அதிகாரிகள் பொறுப்பேற்று பிரச்சனையை சரி செய்ய முயற்சிப்பது அவர்களின் கடமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.