fbpx

இந்திய மாணவர்கள் ஷாக்..!! விசா கட்டணத்தை இரண்டு மடங்காக உயர்த்திய நியூசிலாந்து..!!

சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணத்தை நியூசிலாந்து அரசு இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளது. அதன்படி, சுமார் 19 ஆயிரம் ரூபாய் ஆக இருந்த வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணம், தற்போது 38,190 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.

வெளிநாட்டில் படிக்க விரும்பும் இந்திய மாணவர்களின் தேர்வில், நியூசிலாந்து முதன்மையான  தேர்வாக உள்ளது. இந்நிலையில் விசா கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பது, இந்திய மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது கிட்டத்தட்ட அனைத்து விசா வகைகளையும் பாதிக்கிறது. 

புதிய கட்டணங்கள் இருந்தாலும், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது நியூசிலாந்தின் விசா கட்டணங்கள் குறைவாகவே இருப்பதாக குடிவரவு அமைச்சர் எரிகா ஸ்டான்போர்ட் வலியுறுத்தினார். சமீபத்தில், ஆஸ்திரேலியா மாணவர் விசா விண்ணப்பக் கட்டணத்தை AUD$1,600 ஆக இரட்டிப்பாக்கியது. அதனை தொடர்ந்து நியூசிலாந்திலும் இந்த நடவடிக்கை கொண்டு வரப்பட்டுள்ளது. அதிகரிப்பு இருந்தபோதிலும், நியூசிலாந்தின் மாணவர் விசாக் கட்டணம் ஆஸ்திரேலியாவை விட கணிசமாகக் குறைவாக இருக்கும், ஆஸ்திரேலிய படிப்பு விசா விண்ணப்பத்தில் 40% மட்டுமே செலவாகும்.

Read more ; Income Tax Refund | ரீபண்ட் பணம் தாமதமானால் வட்டி கிடைக்கும்..!! எவ்வளவு தெரியுமா?

English Summary

New Zealand announces significant visa fee increases from October; student visas to get costlier too

Next Post

’இந்த விஷயம் மட்டும் நடந்தால் உலகம் அழியுமாம்’..!! இப்படி ஒரு கோயிலா..? எங்கிருக்கு தெரியுமா..?

Tue Aug 20 , 2024
The Batal Bhuvaneshwar Cave Temple, which is full of various wonders, is guarded by a secret with a hint of ancient mythology.

You May Like