fbpx

2-வது படிக்கும் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்…. போக்சோ சட்டத்தில் இளைஞர் கைது…!

உத்தரபிரதேசம் மாநிலம் பாலியா மாவட்டம் நாஹ்ரா கிராமத்தை சேர்ந்த ஏழு வயது சிறுமி கடந்த 5-ஆம் தேதி அவரது வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தார். இரண்டாம் வகுப்பு படித்து வரும் அந்த சிறுமியை அந்த பகுதியை சேர்ந்த 25 வயதான ரோகித் சவுகான் என்ற இளைஞர் தனது மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றுள்ளார்.

சிறுமியை தனது வீட்டிற்கு கடத்தி சென்ற ரோகித், அங்கு வைத்து சிமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தனது குழந்தைக்கு நடந்த கொடுரமான சம்பவம் குறித்து தகவலறிந்த சிறுமியின் பெற்றோர் தொடக்கத்தில் காவல் துறையில் புகார் அளிக்காமல் இருந்துள்ளனர்.

அதன் பிறகு, சிறுமியின் தந்தை கடந்த வெள்ளிக்கிழமை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து காவல்துறையினர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ரோகித்தை கைது செய்து போக்சோ சட்டத்தில், வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Rupa

Next Post

ரூ.1.75 ஆயிரத்தை கொள்ளையடித்த அரைநிர்வாண திருடன் … கூரையை பிரித்து கடைக்குள்  குதித்து கைவரிசை …..

Sun Sep 11 , 2022
அருப்புக்கோட்டை அருகே ஆயில் மில்லின் கூரையை பிரித்துக் கொண்டு அரை நிர்வாணத்தில் உள்ளே நுழைந்த திருடன் ரூ.1.75 ஆயிரத்தை கொள்ளையடித்துச் சென்றான். அருப்புக்கோட்டையில் ஜோதி ஆயில் மில்ஸ் என்ற எண்ணெய் கடை உள்ளது. இந்த கடைக்கு நேற்று நள்ளிரவு திருடன் மேற்கூரையில் ஓட்டை போட்டுக் கொண்டு உள்ளே நுழைந்தான். அந்த திருடன் அரை நிர்வாணத்தில் வந்து தலையை துணியால் மூடிக் கொண்டு  கள்ளா பெட்டி இருக்கும் இடத்திற்கு சென்று ரூ.1.75 […]

You May Like