விருதுநகர் மாவட்ட பகுதியில் உள்ளது வடக்கு மலையடிப்பட்டி எனும் கிராமம். அந்த பகுதியில் மகேஸ்வரன் மற்றும் மகன் கவிதேவநாதன் (6) வசித்து வந்துள்ளனர். சிறுவனுக்கு காய்ச்சல் தொற்று ஏற்பட்டதால் அரசு டாக்டர் பாஸ்கரனின் கிளினிக்கிற்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார்.
பின்னர் வீடு திரும்பிய நிலையில் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து அதே பகுதியில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் மீண்டும் அனுமதித்த போது ,ஏற்கனவே சிறுவன் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர் .
இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர். மேலும், நேற்று காலை நேரத்தில் மருத்துவ துறை அதிகாரிகள், இறந்த சிறுவனின் வீட்டிற்கு நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது டாக்டர் பாஸ்கர் என்பவரிடம் சிகிச்சைக்கு செல்வதற்கு முன்பு, அதே பகுதியில் உள்ள பெண் மருந்தகர் ஆக்னெஸ்ட் கேத்ரி என்பவரிடம் சிகிச்சை எடுத்துள்ளார் என்பது தெரிய வந்ததுள்ளது. இதையடுத்து போலி மருத்துவரான ஆக்னெஸ்ட் கேத்ரின் கைது செய்யப்பட்டார்.