fbpx

ஆத்திரத்தில் மாமியாரை அடித்துக் கொன்று விட்டு, அவசரமாக தானும் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட மருமகள்..!

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள கொங்கணாபுரம் தானமூர்த்தியூரில் வசித்து வருபவர் தைலம்மாள் (75). சில வருடங்களுக்கு முன்பு இவரது கணவர் எல்லப்பன் இறந்து விட்டதால், தைலம்மாள் தனியாக வசித்து வந்தார். இவருக்கு மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். மேலும் அதே பகுதியில் தைலம்மாளின் கடைசி மகனான மெய்வேல் அவரது மனைவி செல்வியுடன் வசித்து வந்தார். இந்நிலையில் தைலம்மாளுக்கும், செல்விக்கும் அடிக்கடி ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு சண்டை சண்டை வந்துள்ளது. மேலும் தெரு பைப்பில் தண்ணீர் பிடிப்பது வரை கடந்த சில வருடங்களாக அவர்கள் இருவரும் அடிக்கடி சண்டை போட்டு வந்துள்ளனர்

இதனிடையே நேற்று காலை தெரு பைப்பில் தண்ணீர் பிடிப்பதில் ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக செல்வி, தனது மாமியார் தைலம்மாள் வீட்டுக்கு வந்து சண்டை சண்டை போட்டுள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செல்வி, தனது மாமியார் தைலம்மாளை மண்வெட்டி காம்பால் சரமாரியாக அடித்தார். இதில் படுகாயம் அடைந்த மாமியார் தைலம்மாள் ரத்த வெள்ளத்தில் முனகியப்படியே கிடந்துள்ளார். தாயாரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த மெய்வேல், தனது தாயாரின் நிலை கண்டு ‌கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அவரை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு தைலம்மாளை பரிசோதித்த மருத்துவர்கள், தைலம்மாள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இதனிடையே மெய்வேலின் மனைவி செல்வி, மாமியாரை அடித்து கொன்றதால், பயத்தில் வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் தகவல் அளித்தனர். அதன் பேரில் காவல்துறையினர் விரைந்து வந்து இரண்டு பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொங்கணாபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாமியாரை கட்டையால் அடித்து கொன்று விட்டு மருமகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Rupa

Next Post

தலிபான் தீவிரவாத அமைப்பு எச்சரிக்கை: உலக நாடுகள் ஆப்கானிஸ்தானின் விவகாரங்களில் தலையிட வேண்டாம்..!

Mon Jul 4 , 2022
ஆப்கானிஸ்தானின் விவகாரங்களில் தலையிட வேண்டாம் என உலக நாடுகளுக்கு தலீபான் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் தலீபான் தீவிரவாதிகள் ஆட்சி அதிகாரத்தை பிடித்தனர். அப்போது முதல் ஆப்கானிஸ்தானில் உள்ள மக்கள் பொருளாதார நெருக்கடி, உணவு பற்றாக்குறை போன்ற பல பிரச்சினைகளை சமாளித்து வருகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இதனை […]

You May Like