சென்னை நீலாங்கரை சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் என்கின்ற கண்மூடி முருகன். இவர் மேட்டுக்குப்பம் வெங்கடேஸ்வரா அவன்யூவில் இருக்கின்ற ஒரு கட்டுமான பணி நடைபெறும் பகுதியில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த அந்த மக்கள் அதிர்ச்சி அடைந்து துரைப்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் முருகனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி இந்த வழக்கை பதிவு செய்த காவல்துறையினர் கொலை செய்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.
அதில் முருகன் என்கின்ற கண்மூடி முருகன் மீது திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில் இருப்பது தெரிய வந்திருக்கிறது. அத்துடன் பிணமாக, கிடந்த இடத்தில் கண் மூடி முருகன் 4️ பேருடன் மது அருந்தி வந்ததாகவும் மது போதையில் அவர்களுக்குள் உண்டான தகராறு காரணமாக, கண்மூடி முருகனை கொலை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆகவே காவல்துறையினர் தனிப்படை அமைத்து அந்த பகுதியில் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகிறார்கள் அத்துடன் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற அடையாளம் தெரியாத மர்ம நபர்களை துரைப்பாக்கம் தனிப்படை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள்.