fbpx

வங்கதேசம் மியான்மர் இடையே நாளை கரையை கடக்கிறது மோக்கா புயல்…..! கடலில் சூறாவளி காற்று அதிகரிக்கும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…..!

வங்க கடலில் அதி தீவிர புயலாக வலு பெற்றுள்ள மோக்கா புயல் நாளை வங்கதேசம், வடக்கு மியான்மர் இடையே கரையை நோக்கி நகரும். இதனால், வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 175 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய மத்திய வங்க கடல் பகுதிகளில் நிலவிய இந்த புயல், நேற்று முன்தினம் தீவிர புயலாக வலுவடைந்தது.

அதேபோல நேற்று மேலும் வலுவடைந்து அதிதீவிர புயலாக மாறி, அதே பகுதியில் அந்தமான் தலைநகர் போர்ட் பிளேயரில் இருந்து மேற்கு ,வட மேற்கு திசை நோக்கி சுமார் 530 கிலோ மீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது என்று கூறியிருக்கிறார்.

மேலும் இது வடக்கு வடகிழக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடைந்து, நாளை நண்பகலில் தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் வடக்கு மியான்மர் இடையே கரையை நோக்கி நகரும் அப்போது 150 முதல் 175 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீச கூடும் என்று தன்னுடைய செய்தி குறிப்பில் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

Next Post

பிளஸ்-2 தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சென்னை மாநகர மேயர் பிரியா ராஜன்….!

Sat May 13 , 2023
சென்னை மாநகராட்சி கல்வி துறையின் கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகளும், 38 உயர்நிலைப் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன சமீபத்தில் நடைபெற்று முடிந்த 12வது பொது தேர்வில் சிறப்பிடம் பிடித்த மாநகராட்சி பள்ளிகளைச் சேர்ந்த காயத்திரி, தவசியம்மாள், மோனிஷா, விஷ்ணுவரதன், விஷாலி, அஸ்வினி, நஸ்ரின் பேகம், ஸ்ரேயா, துர்கா, ரிஸ்வானா அன்ஜூம் உள்ளிட்டோர் நேற்று ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது மாணவ, மாணவிகளை வாழ்த்திய பிரியா […]

You May Like