fbpx

இந்தியாவில் அதிகரிக்கும் நோய் தொற்று பரவல்….! மாநில அரசுகளை உஷார்ப்படுத்தும் மத்திய அரசு…..!

சமீப தினங்களாக நோய் தொற்று பரவல் அதிகரித்து வருகின்ற சூழ்நிலையில் நாட்டில் தினசரி நோய் தொற்று பாதிப்பு நிலவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் 6 மாதங்களில் இல்லாத விதத்தில் நாட்டில் நோய் தொற்று தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 3,095 பேருக்கு நோய் தொற்று பரவல் ஏற்பட்டிருப்பதாகவும் 5 பேர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதன் மூலமாக நாட்டில் இந்த நோய் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 15,000த்தை தாண்டி உள்ளது. நாடு முழுவதும் 15,208 பேர் தற்சமயம் நோய் தொற்று பரவதால் பாதிக்கப்பட்டு சிகிச்சை இருக்கிறார்கள். நோய் தொற்று விகிதம் தினசரி பாசிட்டிவிட்டி ரேட் 2.61 சதவீதமாக உள்ளது.

நோய் தொற்று பாதிப்பு வேகமாக அதிகரிக்கும் உத்தரபிரதேசம், டெல்லி, கேரளா, ஹரியானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உஷார் எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நோய் தொற்று பாதிப்பு நிலைமை தொடர்பாக சுகாதாரத்துறை உயர் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தி இருக்கின்றார்.

அத்துடன் பாதிப்பு அதிகமாக இருக்கின்ற மாநிலங்களில் அரசு மாவட்ட மருத்துவமனை நிர்வாகங்களை தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறது. நோய் தொற்று பாதிப்பு தீவிரம், உயிரிழப்புகள் உள்ளிட்டவை தற்போது குறைந்து தான் காணப்படுகிறது என்றாலும் மக்கள் உஷார் நிலையில் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

.

Next Post

மதுரையில் மாடு பிடிப்பது தான் வழக்கம் ஆனால் அண்ணன் செல்லூர் ராஜு புலிவாலை பிடித்து விட்டார்…..! அமைச்சர் தங்கம் தென்னரசுவால் சட்டப்பேரவையில் சிரிப்பலை…..!

Fri Mar 31 , 2023
சட்டப்பேரவையில் வினா விடைகள் நேரத்தில் மதுரையில் எந்த தொழிலும் இல்லாத சூழ்நிலையில், மெட்ரோ வந்து என்ன பயன்? என்றும் தொழிற்பேட்டை அரபியுங்கள் மதுரையின் மக்கள் ஆகா ஓகோ என்று பாராட்டுவார்கள் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார். அப்போது திடீரென்று குறுக்கிட்ட சபாநாயகர் 10 வருட கால அதிமுக ஆட்சியில் செய்யாததை தற்போது செய்தீர்களா என்று கேள்வி எழுப்புவதாக கூறினார். இதனால் சட்டப்பேரவையில் சிரிப்பலை உண்டானது. இதற்கு பதிலளித்து […]

You May Like