தமிழகத்தில் பொங்கல் திருநாளன்று நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு உச்சநீதிமன்றம் கடந்த 2014 ஆம் வருடம் அதிரடி தடை விதித்தது இதனை எதிர்க்கும் விதமாக, தமிழ்நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் குதித்த நிலையில், அது தொடர்பான அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்கினார்.
இந்த சூழ்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிராக விலங்குகள் நல அமைப்புகள் தொடை இருந்த வழக்கில் காளைகள் துன்புறுத்தல் என்பது வெறும் கட்டுக்கதை தான் என்று தமிழக அரசின் சார்பாக பல்வேறு வாதங்கள் விரிவாக முன்வைக்கப்பட்டது.
இத்தகைய நிலையில், ஜல்லிக்கட்டு போட்டி மீதான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. கடந்த 2017 ஆம் வருடம் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின்னர் ஜல்லிக்கட்டு போட்டிக்கு என்று அவசர சட்டம் கொண்டுவரப்பட்டு தற்போது, அமைதியோடு ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக காரசார விவாதங்கள் நடைபெற்று வந்த நிலையில் அனைத்து தரப்பு வாதங்களும் நீதிமன்றத்தில் முடிவடைந்த நிலையில், இது தொடர்பான தீர்ப்பை இன்று நீதிமன்றம் வழங்கி உள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு எதிராக பீட்டா உள்ளிட்ட விலங்குகள் நல அமைப்புகள் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் ஒரு பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு தமிழக அரசு கொண்டுவந்த அவசர சட்டம் செல்லும் என்று நீதிபதிகள் தீர்ப்பை வழங்கியிருக்கின்றனர். உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம். ஜோசப் தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி இருக்கிறது.