சென்னை கோட்டூர்புரத்தில் வசிக்கும் 38 வயது மதிக்கத்தக்க பெண் மருத்துவர் ஒருவர் நேற்று முன்தினம் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனுவை வழங்கினார். அந்த புகார் மனுவில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியின் மகளான நான், மருத்துவக் கல்வி படித்து அதே பகுதியில் அழகு மற்றும் முகம் சீரமைப்பு அறுவை சிகிச்சை கிளினிக் நடத்தி வருகிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.
அந்தப் புகார் மனுவில் அந்த பெண் மருத்துவர் தெரிவித்திருந்ததாவது சென்ற மாதம் 20ம் தேதி அடையாளம் தெரியாத ஒரு நபர் தன்னுடைய whatsapp எண்ணுக்கு ஆபாசமாக மெசேஜ் அனுப்பியும் ஆபாசமாக உரையாடி தொந்தரவு வழங்கியதால், அவரை பிளாக் செய்து விட்டதாக கூறியிருக்கிறார். அதன் பிறகு மீண்டும் அந்த நபர் தனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தொந்தரவு வழங்கியதால் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து விடுவேன் என்று தெரிவித்து, இணைப்பை துண்டித்ததாகவும் கூறியிருக்கிறார்.
இதனையடுத்து மறுபடியும் அந்த நபர் போன் செய்து ஆபாசமாக பேசி தொந்தரவு கொடுத்து வந்ததால், அந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து காவல் நிலையத்தில் புகார் வழங்கியிருப்பதாக கூறி இருக்கிறார். இந்த புகாரினடிப்படையில் ஆபாசமாக மெசேஜ் அனுப்புதல், ஐடி பிரிவு உள்ளிட்ட 2️ பிரிவுகளின் கீழ் பதிவு செய்து செல்போன் நம்பரை வைத்து சைபர் கிரைம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பெண் மருத்துவர் ஆபாசமாக முறையில் குறுஞ்செய்தி அனுப்பிய நபர் பம்மலை சேர்ந்த பன்னீர்செல்வம் என்று தெரியவந்தது. அதன் பிறகு பன்னீர்செல்வம் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சேலம் மாவட்டத்தை பூர்வீகமாக கொண்ட பன்னீர்செல்வம், திருமணமாகி பம்மலில் குடும்பத்துடன் வசித்து வருவது தெரிய வந்தது.
பல ஆண்டுகளாக மருந்தாளுனராக பணிபுரிந்து வந்த பன்னீர்செல்வம் 5 வருட காலமாக பெண் மருத்துவரின் கிளிநிகைக்கு மருந்து சப்ளை செய்து கொண்டிருக்கிறார் அதோடு அவ்வப்போது, பெண் மருத்துவரின் கேள்விக்கு பன்னீர்செல்வம் செல்வதால் பெண் மருத்துவர் மீது காதல் ஏற்பட்டதும், அதன் பிறகு பெண் மருத்துவரை சந்திப்பதற்காகவே மாதத்திற்கு 2 முறை கிளினிக்கிற்கு சென்று மருந்து இருப்பு தொடர்பாக கேட்டறிந்து வந்ததாகவும், இந்த விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
மருந்து விநியோகம் குறித்து விசாரிப்பதற்காக செல்லும்போது பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரின் கைப்பேசி எண் கிடைத்ததாகவும், அந்த எண்ணிற்கு புகைப்படத்தை அனுப்பி பெண் மருத்துவருக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பி இருப்பதாகவும் விசாரணையில் பன்னீர்செல்வம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர் காவல்துறையினரால் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்