அமெரிக்காவைச் சார்ந்த பள்ளி மாணவர் ஒருவர் தனது வகுப்பு ஆசிரியரின் முகத்தில் குத்திய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. பொதுவாகவே எல்லா நாடுகளிலும் மாணவர்களுக்கு பன்னி மற்றும் கல்லூரி வளாகங்களிலும் வகுப்பறைகளிலும் கைப்பேசி பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போன்ற தடை அமெரிக்காவில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் இருந்து வருகிறது . இந்நிலையில் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள ஹூஸ்டன் நகரில் கிளாமர் உயர்நிலைப் பள்ளியில் இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது.
இச்சம்பவத்தின் போது வகுப்பறையில் கைபேசியை பயன்படுத்திக் கொண்டிருந்த ஒரு மாணவனிடம் இருந்து அதனை கைப்பற்றி வைத்திருக்கிறார் ஆசிரியர் . அந்த மாணவன் தன்னுடைய கைபேசியை தருமாறு ஆசிரியரிடம் கடுமையாக வாக்குவாதம் செய்திருக்கிறான். ஆனால் அந்த ஆசிரியர் விடாப்பிடியாக கைபேசியை தர மறுத்துள்ளார் . இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவன் ஆசிரியரின் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விட்டுள்ளான். இதனைக் கண்ட சக மாணவர்கள் அலறியுள்ளனர். இது சம்பந்தமான சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளன . இதன் அடிப்படையில் டெக்சாஸ் மாகாண காவல்துறை விசாரணை செய்து வருகிறது. மேலும் இந்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியுள்ளன.