கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பகுதியில் வசிக்கும் கலிவரதன், ஆண்டாள் தம்பதிகளின் மகனான முகேஷ் ராஜு என்பவருக்கும், கிருத்திகா என்பவருக்கு திருமணம் ஆகி 2 பெண் குழந்தைகள் இருக்கின்றன. முகேஷ் ராஜ் அவிநாசியில் வேலை பார்த்து வருகின்றார் என்று கூறப்படுகிறது. அவ்வப்போது விடுமுறை கிடைக்கும்போது மட்டும் வீட்டிற்கு வந்து செல்வார்.
இப்படியான நிலையில், மருமகள் கிருத்திகாவின் நடத்தையில் சந்தேகம் அடைந்த மாமியார் ஆண்டாள், மருமகள் உறங்கிக் கொண்டிருந்த போது வீட்டில் கழிவறை சுத்தம் செய்வதற்கு பயன்படுத்தப்படும் ஆசிட்டை மருமகள் கிருத்திகாவின் முகத்தில் ஊற்றியுள்ளார். அதோடு கொசுவை விரட்டுவதற்கு பயன்படுத்தப்படும் கொசு மருந்தை கிருத்திகாவின் வாயில் ஊற்றி இருக்கிறார்.
இதன் காரணமாக, கிருத்திகா அலறி துடித்திருக்கிறார். சத்தம் கேட்டு ஓடோடி வந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். ஆசிட் ஊற்றப்பட்டதில் கிருத்திகாவின் ஒரு கண்பார்வை போய்விட்டதாக மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன் இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து மருமகள் மீது ஆசிட்டை ஊற்றி கொலை செய்ய முயற்சித்த மாமியார் ஆண்டாளை கைது செய்தனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது மக்களிடையே பெரும் பரபரப்பு காணப்படுகிறது.