அமெரிக்கா அதிபர் ஜோ பைடனுக்கு சென்ற பிப்ரவரி மாதம் மார்பிலிருந்து தோள் புற்று நோய் வெற்றிகரமாக அகற்றப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
சென்ற வருடம் இறுதியில் வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவ மையத்தில் வழக்கமான மருத்துவ பரிசோதனை நடைபெற்றது, அப்போது மார்பில் புண் இருப்பது கண்டறியப்பட்டது. இது ஒரு அடித்தள செல் புற்றுநோய் என்றும் இது பரவுவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஆகவே அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு மார்பில் இருந்த தோல் புற்றுநோய் புண் வெற்றிகரமாக நீக்கப்பட்டதாக மருத்துவர்கள் கூறி இருக்கிறார்கள்.அதோடு, ஜோபைடனுக்கு மேல் சிகிச்சை தேவையில்லை எனவும், அவரது உடல்நிலை தகுதியாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.