மராட்டிய மாநிலம் அவுரங்காபாத் மாவட்டம் கன்னட் தலுகாவில் அமைந்துள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமியை அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் கடந்த வெள்ளிக்கிழழை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது பற்றி பாதிக்கப்பட்ட சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை செய்ததில், சிறுமியை வேறு சிலரும் பல முறை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது . இதனை தொடர்ந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆறு பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஐந்து பேர் 19 வயது முதல் 33 வயது உடையவர்கள் எனவும், எஞ்சிய ஒரு நபர் சிறுவன் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர். கைது செய்யப்பட்ட ஐந்து பேரை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய சிறுவன் அந்த பகுதியில் இருக்கும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.