முன்பெல்லாம் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற சமூக விரோத செயல்களில் சமூக விரோத கும்பலை சார்ந்தவர்கள் தான் ஈடுபட்டு வந்தார்கள்.ஆனால் தற்சமயம் பொறுப்புள்ள பதவியில் இருப்பவர்களும், முக்கிய அரசியல் கட்சியில் பிரமுகராக இருப்பவர்களும் இது போன்ற செயல்களில் ஈடுபட தொடங்கி விட்டார்கள்.
இவ்வளவு ஏன் முன்னாள் அமைச்சர்களும் கூட இது போன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
அந்த வகையில், திருச்சி மலைக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் தான் வினோத் (26) இவர் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட இளைஞரணி செயலாளராக இருக்கிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு 12 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவியிடம் இன்ஸ்டாகிராம் மூலமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்த சிறுமியிடம் அந்த இளைஞர் தன்னை காதலிப்பதாக தெரிவித்து திருமண ஆசை வார்த்தை கூறி, அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து ஏமாற்றி விட்டதாக சொல்லப்படுகிறது.
மேலும் வினோத் அந்த சிறுமியிடம் பழகுவதையும், பேசுவதையும் தவிர்த்து வந்திருக்கிறார்.இது குறித்து அந்த சிறுமி வினோத்திடம் கேள்வி எழுப்பிய போது அந்த சிறுமிக்கு வினோத் கொலை மிரட்டல் விடுத்திருக்கிறார். இதனை தொடர்ந்து அந்த சிறுமி சமூக நலத்துறை அலுவலகத்தில் புகார் வழங்கினார். இந்த புகாரினை அடிப்படையாகக் கொண்டு திருவரங்கம் காவல்துறையினர் விசாரணை நடத்த பரிந்துரை செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, திருவரங்கம் மகளிர் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதன் பிறகு பாஜகவின் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் வினோத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்தொடர்ச்சியாக பாஜகவை சார்ந்தவர்கள் பாலியல் வழக்கில் அந்த கட்சியினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.