fbpx

#Holiday: பள்ளி, கல்லூரி உள்ளிட்ட அனைத்திற்கும் 28-ம் தேதி விடுமுறை வழங்கி தமிழக அரசு உத்தரவு…!

28-ம் தேதியன்று சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள ஆணையில்; மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்டின் தொடக்க நாள் நிகழ்வு ஜூலை 28-ம் தேதியன்று நடைபெறுவதை முன்னிட்டு அவ்விளையாட்டில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வருகையின் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு ஜூலை 28-ம் தேதி ஒரு நாள் மட்டும் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும்.

இந்த கோரிக்கையினை அரசு கவனமுடன் பரிசீலித்து, மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44 ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்டின் தொடக்க நாளன்று ஒரு நாள் மட்டும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அத்தியாவசிய சேவைகள் வழங்கும் அரசுத்துறைகள் தவிர்த்து மற்ற அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து ஆணை வெளியிடப்படுகிறது. மேலும், அவ்விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஜூலை 27ஆம் தேதி நான்காவது சனிக்கிழமை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு பணி நாளாக அறிவித்து அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது என அரசு முதன்மை செயலாளர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: Google… வெளியிட்ட சூப்பர் அப்டேட்… இந் நீங்க யூடியூப்பில் லைவ்  லைவ்ஸ்ட்ரீம் செய்யலாம்….!

Vignesh

Next Post

அடி தூள்... Group- 1 பணிக்கு வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்...! மொத்தம் எத்தனை காலியிடங்கள்...? முழு விவரம் உள்ளே...

Tue Jul 26 , 2022
மொத்தம் காலியாக உள்ள 92 குரூப் – 1 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தேர்வாணையம் அறிவித்துள்ளது. இது குறித்து தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; துணை ஆட்சியர் பணிக்கு 18 இடங்கள், டி.எஸ்.பி பணிக்கு 26 பணியிடங்கள், வணிக வரி உதவி கமிஷனர் பணிக்கு 25 காலியிடங்கள், கூட்டுறவு துணை பதிவாளர் பணிக்கு 13 காலியிடங்கள், ஊரக மேம்பாட்டு துறை உதவி இயக்குனர் பணிக்கு 7 காலியிடங்கள் , மாவட்ட […]

You May Like