fbpx

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 15 நாட்களுக்கு பட்டாசு விற்பனை -சுற்றுலாத்துறை அறிவிப்பு

தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் 10ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி என்றாலே நமக்கு முதலில் தோன்றுவது பட்டாசுக்கள் தான் அதன் பிறகு தான் எல்லாமே. சென்னையில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் போது தீவுத்திடலில் மாபெரும் பட்டாசு விற்பனை நடத்தப்படும். அதன்படி இந்த ஆண்டும் தீவுத்திடலில் பட்டாசு விற்பனை குறித்து அறிவிப்பை சுற்றுலாத்துறை தற்போது வெளியிட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 29ஆம் தேதி முதல் நவம்பர் 12ஆம் தேதி வரை சென்னை தீவுத்திடலில் பட்டாசு விற்பனை செய்யப்படும் என்று தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் அறிவித்துள்ளது. மேலும், விபத்தை தவிர்க்க ஒவ்வொரு கடைகளுக்கும் 3 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும், பட்டாசு விற்பனையில் ஈடுபடுவோர் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் இந்த தொழிலில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும், என சில விதிகள் பட்டாசு கடைகளை அமைக்கும் உரிமையாளர்களுக்கு சுற்றுலாத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kathir

Next Post

BB Tamil 7 | பிரபல செய்தி வாசிப்பாளருக்கு போட்டியாக களமிறங்கும் மற்றொரு..!! பிக்பாஸ் சீசன் 7 அப்டேட்..!!

Wed Aug 23 , 2023
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இம்முறை ஒளிபரப்பாகவுள்ள சீசன் 7-யும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார். இதற்காக அவருக்கு ரூ.100 கோடிக்கு மேல் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் தான் 7-வது சீசனுக்கான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்தது. இந்த சீசனில் எந்தெந்த பிரபலங்கள் போட்டியாளர்களாக களமிறங்கவுள்ளனர் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் […]

You May Like