fbpx

2 நாட்களில் ரூ.1,000-க்கு மேல் குறைந்த தங்கம் விலை.. மகிழ்ச்சியில் நகைப்பிரியர்கள்..

சென்னையில் கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,064 குறைந்துள்ளது..

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது..

அந்த வகையில் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த முதலே தொடர்ந்து தங்கம் விலை கடுமையாக உயர்வதும், பின்னர் குறைவதும் என்ற நிலையே நீடித்து வருகிறது.. இந்நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.68 குறைந்து ரூ.4672-க்கு விற்பனையாகிறது.. இதனால் தங்கம் விலை சவரனுக்கு ரூ.544 குறைந்து ரூ.37,376-க்கு விற்பனையாகிறது.. இதே போல் வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளி ரூ.2 குறைந்து ரூ.62,50-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.62,500-க்கு விற்பனையாகிறது..

நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்தது.. இந்நிலையில் இன்று ரூ.544 குறைந்ததால் 2 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,064 குறைந்துள்ளது.. இதனால் இல்லத்தரசிகள், நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்…

Maha

Next Post

அரசியல் சாசனம் குறித்து சர்ச்சை பேச்சு..! அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் சஜி செரியன்..!

Thu Jul 7 , 2022
கேரள அமைச்சரவையில் இருந்து அமைச்சர் சஜி செரியன் தனது பதவியை ராஜினாமா செய்தார். கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் உள்ள மல்லப்பள்ளி என்ற இடத்தில் ஆளும் சிபிஎம் கட்சி சார்பில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாநில அமைச்சர் சஜி செரியன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், அழகான அரசியல் சாசனத்தை நாம் கொண்டிருக்கிறோம் என அடிக்கடி கூறுகிறோம். ஆனால், பிரிட்டிஷ் முறையை கண்மூடித்தனமாக நகலெடுத்து உருவாக்கப்பட்டதுதான் நமது அரசியல் […]
அரசியல் சாசனம் குறித்து சர்ச்சை பேச்சு..! அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் சஜி செரியன்..!

You May Like