fbpx

இந்திய ரூபாயிலேயே வெளிநாட்டு இறக்குமதிகளுக்கு பேமெண்ட்!… 18 நாடுகளுக்கு ஒப்புதல் அளித்த ரிசர்வ் வங்கி!… விவரம் உள்ளே!

இந்திய இறக்குமதியாளர்கள் டாலர், யூரோ போன்ற நாணயங்கள் அல்லாமல் இந்திய ரூபாயிலேயே வெளிநாட்டு இறக்குமதிகளுக்கு பேமெண்ட் செய்யும் வகையில் 18 நாடுகளின் வங்கிகளுக்கு வோஸ்ட்ரோ கணக்குகளைத் திறக்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.

பிப்ரவரி 2022ல் உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில் இந்திய ரூபாய் மதிப்பு பெரிய பாதிப்பை எதிர்கொண்டது மட்டும் அல்லாமல் அதிகளவிலான பாதிப்பை வர்த்தக சந்தை, பொருளாதாரம், விலைவாசியிலும் எதிர்கொண்டது. இந்த நிலையில் இந்திய ரூபாய் அடைப்படையிலான பேமெண்ட் முறையை கொண்டு வந்தது. 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளிநாட்டு பேமெண்ட்-களை ரூபாயில் செலுத்தும் கட்டமைப்பை உருவாக்க உள்ளதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. அந்தவகையில், தற்போது போட்ஸ்வானா, பிஜி, ஜெர்மனி, கயானா, இஸ்ரேல், கென்யா, மலேசியா, மொரீஷியஸ், மியான்மர், நியூசிலாந்து, ஓமன், ரஷ்யா, சீஷெல்ஸ், சிங்கப்பூர், இலங்கை, தான்சானியா, உகாண்டா மற்றும் இங்கிலாந்து ஆகிய 18 நாடுகளின் வங்கிகளுக்கு இந்தியாவில் வோஸ்ட்ரோ கணக்குகளைத் திறக்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.

இந்தியாவில் வோஸ்ட்ரோ கணக்குகளைத் திறக்க 18 நாடுகளை சார்ந்து சுமார் 60 ஒப்புதல்களை வெளிநாட்டு வங்கிகளுக்கு அளித்துள்ளதாக மத்திய நிதிதுறையை சேர்ந்த மாநில அமைச்சர் பகவத் கார்ட் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்தார். இதன் மூலம் இனி வெளிநாட்டு வர்த்தகத்திற்கு டாலருக்கு ரூபாயை மாற்ற தேவையில்லை என்றும், இதற்காக எக்ஸ்சேஞ்ச் கட்டணமும் செலுத்த தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக சிங்கப்பூரில் இருந்து இந்தியாவுக்கு பொருட்கள் இறக்குமதி செய்யப்படும் பட்சத்தில் இரு நாடுகளின் நாணய மதிப்பீட்டில் ரூபாய் மதிப்பை கணக்கிட்டு பில் செய்ய வேண்டும். இதற்கு இறக்குமதியாளர்கள் ரூபாய் வடிவிலேயே பேமெண்ட் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

உலகின் அதிக எடை கொண்ட முள்ளங்கி உற்பத்தி!... ஜப்பான் நிறுவனம் கின்னஸ் உலக சாதனை!

Sat Mar 18 , 2023
உலகின் அதிக எடை கொண்ட முள்ளங்கியை வளர்த்து ஜப்பான் நிறுவனம் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது. தோட்டத்தில் காய்கறிகளை வளர்ப்பது பலரின் பொழுதுபோக்காக நீண்ட காலமாக இருந்து வருகிறது. காய்கறிகளை வளர்ப்பதற்கு நிறைய நேரம், பொறுமை மற்றும் நிபுணத்துவம் தேவை. சிலர் அதை ஒரு பொழுதுபோக்காகச் செய்கிறார்கள், மற்றவர்கள் உலக சாதனைகளைப் படைக்க இதைச் செய்யலாம். இப்போது, ​​அதிக எடையுள்ள முள்ளங்கியை வளர்த்து ஜப்பானிய உரம் மற்றும் விவசாயப் பொருட்களின் […]

You May Like