fbpx

PM Modi Birthday : 2014ல் ஆட்சிக்கு வந்த பின் மோடியின் பிறந்தநாள் விழா எப்படி கொண்டாடப்பட்டது..?

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.. அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், மாநில ஆளுநர்கள், முதலமைச்சர்கள் என வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.. பாஜகவினர் அவரின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் திட்டமிட்டுள்ளனர்.. ஆனால், 2014ல் பிரதமராக பதவியேற்றதில் இருந்து, நரேந்திர மோடியும், பாஜகவும், அவரது பிறந்தநாளை, ‘சேவா’ மற்றும் வளர்ச்சி முயற்சிகளை துவக்க பயன்படுத்துகின்றனர்.

இந்த ஆண்டும், நாட்டின் வனவிலங்குகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில், நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறுத்தைகளை மத்தியப் பிரதேச தேசிய பூங்காவில் மோடி விடுவிக்க உள்ளார்..மேலும் மகளிர் சுயஉதவி குழுக்களுடன் உரையாட உள்ளார்.

கடந்த ஆண்டுகளில் மோடி பிறந்தநாள் விழா எப்படி கொண்டாடப்பட்டது என்பது குறித்து பார்க்கலாம்..

2021: நாடு முழுவதும் 2.5 கோடிக்கும் அதிகமான கோவிட் தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டு சாதனை படைத்தது.

2020: நாடு முழுவதும் உள்ள கோவிட்-19 கவலைகளுக்கு மத்தியில், மக்களுக்கு உதவும் வகையில் நலத்திட்டங்களில் பாஜக கவனம் செலுத்தியது.

2019: பிரதமர் மோடி, குஜராத்தில் தனது பிறந்தநாள் விழாவை கொண்டாடினார்… சர்தார் சரோவர் அணையை பார்வையிட்ட அவர், நர்மதா நதி அணை முதன்முறையாக 138.68 மீட்டர் உயரத்தை எட்டியதையும் பார்வையிட்டார்..

2018: மோடி, தனது மக்களவைத் தொகுதியான வாரணாசிக்குச் சென்றார். பள்ளிக்கு சென்று மாணவர்களுடன் கலந்துரையாடினார். காசி விஸ்வநாதர் கோவிலுக்கும் சென்றார்.

2017: குஜராத்தில் சர்தார் சரோவர் அணையை பிரதமர் திறந்து வைத்தார். விமானப்படையின் மார்ஷல் அர்ஜன் சிங்கின் மறைவுக்கு அவரது குடும்பத்தினரையும் அவர் சந்தித்து ஆறுதல் கூறினார்.

2016: மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக அவர் தனது சொந்த மாநிலத்தில் உள்ள நவ்சாரிக்கு சென்றார். அவர் லிம்கேடாவில் பழங்குடியினருடன் நேரத்தைச் செலவிட்டார், பின்னர் தாஹோத் மாவட்டத்தில் வறண்ட பகுதியில் குடிநீர் மற்றும் பாசனத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

2015: 1965 இந்திய-பாகிஸ்தான் போரின் பொன்விழாவைக் குறிக்கும் இராணுவ கண்காட்சியான சௌரியாஞ்சலிக்கு பிரதமர் வருகை தந்தார்.

2014: அகமதாபாத்தில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு மோடி இரவு விருந்து அளித்தார்.

பிரதமர் தனது பிறந்தநாளில் தனது தாய் ஹீராபெனின் ஆசிர்வாதத்தை பெறுவதற்காக அடிக்கடி குஜராத்திற்குச் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

5 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை...! உயிரிழப்பு எண்ணிக்கை எவ்வளவு...? வெளியான புதிய விவரம்...!

Sat Sep 17 , 2022
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 5,747 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 29 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 5,618 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]

You May Like