fbpx

பஞ்சாப் நேஷனல் வங்கியில் பட்ட படிப்பு முடித்தவர்களுக்கு வேலை..‌! உடனே விண்ணப்பிக்கவும்..‌

பஞ்சாப் நேஷனல் வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Officer (Fire-safety), Manager (Security) பணிகளுக்கு என 103 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 50 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் B.Tech, Post Graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பணிக்கு ஏற்றபடி ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.69,810 முதல் ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. விண்ணப்பதார்கள் Personal Interaction மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு பொதுப்பிரிவில் உள்ள நபர்களுக்கும், SC, ST, PWD மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு 1003 ரூபாய் ஆக விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள நபர்கள் 30.08.2022 மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For More Info: https://www.pnbindia.in/downloadprocess.aspx?fid=ft8a1nftpaUyYqYPqlOuDg==

Vignesh

Next Post

கவனம்.. உயர் ரத்த அழுத்தத்தின் இந்த ஆரம்ப அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்..

Sat Aug 6 , 2022
இன்று உலகில் அதிகம் காணப்படும் வாழ்க்கை முறை நோய்களில் ஒன்று உயர் ரத்த அழுத்தம் ஹைபர் டென்சன் ஆகும்.. . உலகளவில் வயது வந்தோரில் 30% க்கும் அதிகமானோர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். உயர் இரத்த அழுத்தம் என்பது தமனி சுவர்களுக்கு எதிரான இத்தத்தின் விசை அதிகமாக இருக்கும் ஒரு நிலை என வரையறுக்கப்படுகிறது. இதயம் எவ்வளவு ரத்தத்தை பம்ப் செய்கிறதோ, தமனிகள் குறுகுவதற்கான வாய்ப்புகள் அதிகம், அதனால் […]

You May Like