பல தாய்மார்களுக்கு இருக்கும் பெரிய பிரச்சனையே தங்களின் பிள்ளைகளுக்கு என்ன ஸ்நாக்ஸ் கொடுக்கலாம் என்பது தான். ஸ்நாக்ஸ் என்ற பெயரில் ஏதோ ஒன்றை பிள்ளைகளுக்கு கொடுத்து விட முடியாது. ஸ்நாக்ஸின் சுவை எவ்வளவு முக்கியமோ அதே அளவு அது ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். அப்படி நீங்களும் உங்கள் குழந்தைகளுக்கு எப்படி சத்தான ஸ்நாக்ஸ் கொடுக்கலாம் என்று யோசித்து கொண்டிருந்தாள் கட்டாயம் இதை செய்து பாருங்கள்.
சிறுதானிய கேக்குகளில் ஒன்றான கேழ்வரகு கேக் செய்து கொடுத்தால் குழந்தைகளின் வளர்ச்சி அதிகரிக்கும். அதே சமையம் ஆரோக்கியமாகவும் இருக்கும். இந்த கேக் செய்வதற்கு, முதலில் முட்டையின் வெள்ளை கருவுடன் சர்க்கரை தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பின்னர் அதே கலவையுடன் பால், முட்டையின் மஞ்சள் கரு சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ள வேண்டும். கலந்து கொண்டு இருக்கும் பொழுது கொஞ்சம் கொஞ்சமாக ராகி மாவு, உப்பு, கோகோ பவுடர் சேர்த்து மீண்டும் நன்றாக கலந்து கொள்ளவும்.
இதனை தொடர்ந்து நமக்கு கேக் என்ன வடிவில் வேண்டுமோ அந்த வடிவில் கேக் மோல்ட் அல்லது ஏதோ ஊர் அடிகனமான பாத்திரத்தில் பட்டர் அல்லது நெய் தடவி கேக் கலவையை அதில் ஊற்ற வேண்டும். கலவையை ஊற்றி வேக வைத்து எடுக்கவும். கேக் ஆறிய பின்னர் தான் நன்றாக இருக்கும். ஆகவே 10 நிமிடங்கள் வரை குளிர வைக்க வேண்டும். தற்போது சுவையான கேழ்வரகு கேக் தயார்!