ஆசியாவின் மிகப்பெரிய விமானக் காட்சி நிகழ்வான ஏரோ இந்தியா 2023-ஐ பெங்களூரில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்க உள்ளார்.
ஆசியாவின் மிகப்பெரிய விமானங்கள் மற்றும் விமான பாகங்கள் காட்சியின் 14வது பதிப்பான ஏரோ இந்தியா 2023-ஐ இன்று கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் தொடங்கி வைக்கிறார். ‘100 கோடி வாய்ப்புகளுக்கான ஓடுபாதை’ என்ற கருப்பொருளில் ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வு விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைத் திறன்களில் இந்தியாவின் வளர்ச்சியை வெளிப்படுத்தும்.
பாதுகாப்பான மற்றும் வளமான எதிர்காலத்திற்கு மேக் இன் இந்தியா, மேக் ஃபார் தி வேர்ல்ட் என்ற நோக்கத்திற்கு ஏற்ப, உள்நாட்டு உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை காட்சிப்படுத்துதல் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுடன் கூட்டு செயல்பாடுகளை உருவாக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும்.
15-ம் தேதி வரை வணிகம் தொடர்பான நாட்களாக இருக்கும். 16 மற்றும் 17 ஆம் தேதிகள் மக்கள் பங்கேற்புகளைக் கொண்டதாக பொது மக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்படும். இந்த 5 நாள் நிகழ்வுகளின்போது பாதுகாப்பு அமைச்சர்களின் மாநாடும் நடைபெறும். ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான நிகழ்ச்சி, பெரிய கண்காட்சி, இந்திய அரங்கம் மற்றும் விண்வெளி நிறுவனங்களின் வர்த்தக கண்காட்சி ஆகியவையும் நடைபெறும்.