fbpx

பதவி உயர்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள்..!! உடனே இந்த பட்டியலை தயார் பண்ணுங்க..!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு

அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவர்களின் பணிவரன்முறை கருத்துரு பட்டியலை அனுப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ”பள்ளிக்கல்வியில் 2019 ஜனவரி 1ஆம் தேதி முன்னுரிமை அடிப்படையில் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுக்கு அதே ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி கலந்தாய்வு நடத்தப்பட்டது.

இதில் தகுதியான முதுநிலை ஆசிரியர்கள், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. பின் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பாணையின் அடிப்படையில், கூடுதல் முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்பட்டு, 2021 டிசம்பர் 31ஆம் தேதி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு அளிக்கப்பட்டது.

இவர்களை பணிவரன்முறை செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்து, 2021 டிசம்பர் 31ஆம் தேதி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களின் பணிவரன்முறை கருத்துருவை தயார் செய்து அனுப்ப வேண்டும். கருத்துருவை மின்னஞ்சலில் அனுப்பிவிட்டு, தனது கையொப்பமிட்ட பிரதியை பள்ளிக்கல்வி இயக்குநரகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

இந்தப் பட்டியலில் எவர் பெயரும் விடுபடக்கூடாது. மேலும், பதவி உயர்வு பெற்ற தலைமை ஆசிரியர் பெயர் ஏதேனும் விடுபட்டால், அதற்கான முழுபொறுப்பையும் சம்மந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரே ஏற்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

’அடடே இது நல்லாருக்கே’..!! வீடு வாங்கினால் மனைவி இலவசம்..!! ரியல் எஸ்டேட் விளம்பரத்தால் வெடித்த சர்ச்சை..!!

Sat Jan 27 , 2024
உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனாவின் பொருளாதாரம் இப்போது மிகப் பெரிய சிக்கலில் இருக்கிறது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. அந்நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங்க கூட இதை ஒப்புக்கொண்டு இருந்தார். சீனாவின் வளர்ச்சிக்கு இத்தனை காலமாக ரியல் எஸ்டேட் துறை தான் முக்கிய காரணமாக இருந்தது. ஆனால், இப்போது இந்த துறையிலும் சுணக்கம் இருக்கும் நிலையில், விற்பனையை அதிகரிக்க பல வினோதமான முறைகளில் விளம்பரப்படுத்தி வருகின்றனர். அப்படி ஒரு விளம்பரம் […]

You May Like