fbpx

வங்கி வேலை தேடுபவர்களுக்கு அருமையான வாய்ப்பு…! 400-க்கும் மேற்பட்ட பணியிடங்கள்… உடனே விண்ணப்பிக்கவும்….!

பஞ்சாப் & சிந்து வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Clerk பணிகளுக்கு என 463 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 20 முதல் 28 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து ஏதேனும் ஒன்றில் பட்ட படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு பணிக்கு ஏற்றபடி ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.63, 840 முதல் ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த பணிக்கு பொதுப்பிரிவில் 850 ரூபாய் ஆகவும், SC, ST, PWD மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு 150 ரூபாய் ஆகவும் விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள நபர்கள் 21-ம் தேதி மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For More Info: IBPS-Clerk-Vacancies-Notification.pdf

Also Read: இந்தியாவில் ஆட்டத்தை தொடங்கிய குரங்கு அம்மை… 3,413 பேர் இது வரை பாதிப்பு…! எல்லாம் உஷரா இருங்க… மத்திய அரசு போட்ட உத்தரவு…!

Vignesh

Next Post

ஒகேனக்கல்லுக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிப்பு..! வீடுகளில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதி..!

Fri Jul 15 , 2022
ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடி நீர் வந்து கொண்டிருப்பதால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநில பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 72,646 கனஅடியாக இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 81,930 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதேபோல் கபினி அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 34 ஆயிரம் கனஅடியாக உள்ள நிலையில், அணையில் இருந்து […]
தீவிரமடைந்த பருவமழை..! ஒகேனக்கல்லில் மீண்டும் வெள்ளப்பெருக்கு..! எச்சரிக்கை

You May Like