fbpx

Ramadan: தமிழ்நாட்டில் இன்றுமுதல் ரமலான் நோன்பு தொடக்கம்!… தலைமை ஹாஜி அறிவிப்பு!

Ramadan: தமிழ்நாட்டில் பிறை தெரிந்ததை அடுத்து, இன்றுமுதல் ரமலான் நோன்பு தொடங்கப்படும் என்று தலைமை ஹாஜி அறிவித்துள்ளார்.

ரமலான் பண்டிகைக்கு முன்பாக இஸ்லாமியர்கள் ஒரு மாத காலம் நோன்பு இருப்பது மரபு.நோன்பு காலத்தில் இஸ்லாமியர்கள் சஹர் எனப்படும் விடியலுக்கு முன்பாக உணவு சாப்பிட்டு விட்டு பிறகு சூரியன் மறையும் வரை உணவு உண்ணாமல் நோன்பு இருப்பார்கள். ஒவ்வொரு பகுதியிலும் பிறை தெரிவதற்கு ஏற்ப ரமலான் மாதம் தொடங்கும். சவூதி அரேபியாவில் நேற்றுமுன் தினம் ரமலான் பிறை தென்பட்டது. இதனால் நேற்று (திங்கட்கிழமை) முதல் சவுதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் ரமலான் மாதம் நோன்பு தொடங்கியுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டிலும் பிறை பார்க்கப்பட்டு ரமலான் மாதம் தொடங்கிவிட்டதாக தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். இதனால், நோன்பு நோற்பது, தொழுகை உள்ளிட்டவர்களை இஸ்லாமியர்கள் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பதுடன், தராவீஹ் தொழுகை உள்ளிட்ட அனைத்து அமல்களையும் சிறப்பாக நிறைவேற்றிக் கொள்ளுமாறு இஸ்லாமிய அமைப்புகள் கேட்டுக்கொண்டுள்ளன.

Readmore: தேர்தல் நேரத்தில் மக்களின் உணர்ச்சிகளைச் சீண்டி பார்க்கிறார் பிரதமர் மோடி..! முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்..!

Kokila

Next Post

தும்மல் வந்தால் கூட என்னை பதவி விலக சொன்ன ஸ்டாலின் போதைப்பொருள் விவகாரத்தில் இன்னும் ராஜினாமா செய்யாதது ஏன்?… EPS!

Tue Mar 12 , 2024
EPS: அ.தி.மு.க., ஆட்சியில், தனக்கு தும்மல் வந்தாலும், நான் பதவி விலக வேண்டும் என்று சொன்ன, இன்றைய முதல்வர் ஸ்டாலின், போதைப்பொருள் விவகாரத்தில் இன்னும் ராஜினாமா செய்யாதது ஏன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில், இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த, 110 கோடி ரூபாய் மதிப்பிலான, 100 கிலோ, ‘ஹசீஸ்’ என்ற போதைப்பொருளும், 874 கிலோ கஞ்சாவும், […]

You May Like