fbpx

வேகமாக ஆவியாகிவரும் கடல்கள்!… இனிமேல் மனிதன் வாழவே முடியாது!… வெள்ளி கிரகம்போல் மாறும் பூமி?… புதிய ஆய்வில் ஷாக்!

கடல்கள் வேகமாக ஆவியாகிவருவதால், அடுத்த 200 ஆண்டுகளில் வெள்ளி கிரகம் போல் மனிதன் வசிக்க தகுதியற்றதாக பூமி மாறிவிடும் என்று புதிய ஆய்வு ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக பிரிட்டன் நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் நீரியல் மையத்தின் டாக்டர் நிக்கோலஸ் கோவன் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டு தகவல் வெளியிட்டுள்ளனர். மனிதர்கள் அதிகளவு மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்சைடு வாயுக்களை வெளியிடுவதால் புவி வெப்பமடைவது அதிகரித்து வருகிறது. இதனால் கடல்கள் வேகமாக ஆவியாகி வருகின்றன. நீராவி வானத்தை நோக்கிச் சென்று போர்வையைப் போல மூடுகிறது. இதன் காரணமாக பூமியில் உள்ள வெப்பம் வளிமண்டலத்தில் கலக்காமல் பூமி வெப்பமடைவது தொடர்ந்து அதிகரிக்கிறது.

பூமி வெப்பமடைவதால், கடல்களில் உள்ள நீர் தொடர்ந்து மறைந்துவிடும் என்றும், சில ஆண்டுகளில், கடல்கள் முற்றிலும் ஆவியாகி, விடும் என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது. சூரியனில் இருந்து வரும் கதிர்வீச்சு மெதுவாக அதிகரித்து வரும் நிலையில், பூமியின் வெப்பநிலையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

தொடர்ந்து அதிகரித்து வரும் புவி வெப்பமடைதல், கடல் ஆவியாதல் போன்றவை 200 ஆண்டுகளில் பூமியில் பசுமை இல்ல வாயுக்களை அதிகரித்து, கொஞ்சம் கூட குறைக்க முடியாத நிலையை எட்டிவிடும் என்று இந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால், அடுத்த 200 ஆண்டுகளில் பூமி வெள்ளி கிரகம் போல் மாறி, மனிதர்கள் வசிக்கத் தகுதியற்றதாக மாறிவிடும் என்று கூறப்படுகிறது.

Kokila

Next Post

போரைவிட, பசி பட்டினியால்தான் அதிக உயிர் பலி நேரிடும்!… நேதன்யாகு பகீர்!... நாளுக்குநாள் மோசமாகும் காஸாவின் நிலை!

Wed Dec 27 , 2023
காஸாவில் வரலாறு காணாத பஞ்சம் வந்துவிடும். போரால் கொல்லப்படுவதை காட்டிலும், பசி பட்டினியால் பலரும் உயிரிழப்பார்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் – காஸா இடையிலான சண்டை 81வது நாளை எட்டியுள்ளது. நாளுக்கு நாள் உயிரிழப்புகள் அதிகரித்து கொண்டே செல்கின்றன. இஸ்ரேல் தரப்பில் 1,139 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 8,730 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரை பகுதியில் 76 குழந்தைகள் உட்பட 303 பேர் உயிரிழந்துள்ளனர். 3,450 பேர் காயமடைந்துள்ளனர். […]

You May Like