தமிழ்நாட்டில் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் மகளிர் உரிமைத்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் ஆயிரம் ரூபாய் தகுதியுள்ள பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. மேலும், தகுதி வாய்ந்த அனைவருக்கும் இந்த தொகை சென்று சேரும் என்பதால் விடுபட்டவர்கள் மேல்முறையீடு செய்யவும் தமிழ்நாடு அரசு வாய்ப்பு வழங்கியுள்ளது.
இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியானோர் விடுபட்டு விடக்கூடாது என்று தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும், தகுதியான ஒரு சிலர் விடுபட்டிருந்தால் அந்த பட்டியலை மாவட்ட செயலாளரிடம் வழங்க திமுகவினருக்கு உதயநிதி அறிவுரை வழங்கியுள்ளார். தகுதியுள்ள 90 சதவீத மகளிருக்கு உரிமைத்தொகை சென்று சேர்ந்து விட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.