நாடாளுமன்ற தேர்தலில் நடிகர் கமல்ஹாசன் தலைவராக உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி, திமுக கூட்டணியில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக மறைமுக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. மக்கள் நீதி மய்யம் சார்பில் கோவை மற்றும் தென் சென்னை ஆகிய இரண்டு தொகுதிகளை கேட்டு வருகிறது. இதில் ஏதேனும் ஒன்றாவது கிடைக்குமா என கமல் கட்சியினர் எதிர்பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் கட்சி அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய கமல்ஹாசன், “டார்ச் லைட் சின்னத்தில்தான் போட்டி. அது கிடைக்காவிட்டால் தனிச்சின்னத்தை கேட்டு பெறுவோம்” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.