பாலியல் தொல்லையில் இருந்து தற்காத்து கொள்ள பள்ளி மாணவி உருவாக்கிய பிரத்யேக காலணி…
பாலியல் சீண்டலில் இருந்து பெண்களை பாதுகாத்துக்கொள்ள ஒரு புதிய காலணி ஒன்றை கர்நாடக மாநிலம் கல்புர்கியில் உள்ள எஸ்ஆர்என் மேத்தா பள்ளியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி விஜயலட்சுமி கண்டுபிடித்துள்ளார். இவர் உருவாக்கிய அந்த காலனியில் மின் இணைப்பு மற்றும் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளது.

இது ஒரு பெண் தனியாக இருக்கும்போது பாலியல் தொல்லையில் ஈடுபடுவோரை இந்த காலணி கொண்டு எட்டி உதைத்தாள் பேட்டரிகளின் உதவியுடன் காலணி வழியாக மின்சாரம் பாய்ந்து அந்த நபர் கீழே விழுந்துவிடுவார், இதன் உதவியால் பெண்கள் குற்றவாளிகளை எதிர்த்துப் போராட முடியும் என்று தெரிவித்தார்.
மேலும் இந்த காலணியில் ஜிபிஎஸ் இருப்பதால் பாலியல் தொல்லை போன்ற பிரச்சனைகளில் மாட்டிக்கொள்ளும்போது ஜிபிஎஸ் உதவியால் தாம் எங்கே இருக்கிறோம் என அவரது பெற்றோருக்கு இருப்பிடத்துடன் கூடிய எச்சரிக்கை மணியை அனுப்பி விட முடியும் என்றும் தெரிவித்தார். மாணவியின் இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.