fbpx

மீண்டும் திறக்கப்படும் பள்ளிகள்..!! மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட தமிழ்நாடு அரசு..!!

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் நடந்து முடிந்த நிலையில், தற்போது கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தொடர்ந்து பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஜூன் 14ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 12ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்” என்று அதிரடியாக அறிவித்தார். இதனால் மாணவர்களின் கோடை விடுமுறை மீண்டும் நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. சொந்த ஊர் சென்ற மாணவர்கள் ஊர் திரும்ப வசதியாக 1500 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதில். சென்னைக்கு 650 பேருந்துகளும் கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, சேலம் மற்றும் பெங்களூரு நகரங்களுக்கு 850 பேருந்தில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

மும்பை லிவ் இன் ரிலேஷன்ஷிப் கொலை வழக்கு…..! நடந்தது இது தான் உண்மையை உடைத்த காவல்துறை…..!

Sat Jun 10 , 2023
மும்பை மீரா ரோடு பகுதியில் இருக்கின்ற அடுக்குமாடி குடியிருப்பின் 7வது மாடியில் அமைந்திருக்கின்ற வீட்டில் மனோஜ் சாகனி 56 என்றவரும் சரஸ்வதிவைத்யா (32) என்ற பெண்ணும் கடந்த மூன்று வருடங்களாக லிவ் இன் பார்ட்னர்களாக வாழ்ந்து வந்தனர். இத்தகைய நிலையில் தான் இவர்களின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியிருக்கிறது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த வீட்டில் […]
பைக்கில் சென்ற இளைஞரை சரமாரியாக வெட்டி தலையை மட்டும் எடுத்துச் சென்ற மர்ம கும்பல்..!! அதிரவைக்கும் சம்பவம்..!!

You May Like