fbpx

வன்முறையை தூண்டும் சீமானின் பேச்சு..!! வழக்கை விரைந்த விசாரிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு..!!

சென்னை ஜார்ஜ் டவுன் பகுதியில் கடந்த 2010 ஜூலை 10ஆம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று பேசினார்.

அப்போது, ‘தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குவது நீடித்தால், தமிழ்நாட்டில் தங்கிப் படிக்கும், சிங்கள மாணவர்கள் உயிருடன் நடமாட முடியாது’ என்று எச்சரித்தார். இதையடுத்து, இரு பிரிவினருக்கு இடையே வன்முறையை துாண்டும் விதமாக பேசியதாகக் கூறி வடக்கு கடற்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து சீமானை கைது செய்தனர். பின், அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், இது தொடர்பான வழக்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் கடந்த 2018ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில், 2021ஆம் ஆண்டு சீமான் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது காவல்துறை தரப்பில், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் எஸ்.ராஜாகுமார் ஆஜராகி, ”வழக்கில் சாட்சி விசாரணை துவங்கி, இதுவரை 10-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை முடிந்துள்ளது. இதனால், வழக்கை ரத்து செய்யக்கூடாது” என்று வாதிட்டனர். அப்போது சீமான் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ”வழக்கில் சாட்சிகள் விசாரணை துவங்கி விட்டதால், மனுவை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

இதையடுத்து உயர்நீதிமன்ற நீதிபதிகள், மனுவை திரும்பப் பெற அனுமதித்ததோடு, ‘மனுதாரருக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்கை, விசாரணை நீதிமன்றம் விரைவாக விசாரித்து முடிக்க வேண்டும்’ என உத்தரவிட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.

Read More : தலா ரூ.2 லட்சம் நிதியுதவி..!! குழந்தைகளையும் நானே படிக்க வைக்கிறேன்..!! தவெக தலைவர் விஜய் அதிரடி..!!

English Summary

The petition was dismissed, ordering that the trial court “expeditiously investigate and conclude the pending case against the petitioner.”

Chella

Next Post

2024ல் 999 போலி வெடிகுண்டு மிரட்டல்கள்!. விமானப் பாதுகாப்புக்கு கடும் சவால்!. நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்!

Fri Nov 29 , 2024
999 fake bomb threats in 2024! Aviation security is a serious challenge! Central government information in Parliament!

You May Like