fbpx

முதியோர், மாற்றுத்திறனாளிகள், விதவைகள் உதவித்தொகை (Allowance) ரூ.1,500/- ஆக உயர்வு.! அரசு புதிய அறிவிப்பு.!

தமிழக அரசின் சார்பில் முதியோர் மாற்றுத் திறனாளிகள் மற்றும் விதவைகள் ஆகியோருக்கு உதவித்தொகையாக(Allowance) ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் மக்களுக்கு பயன்படும் வகையில் இந்த உதவிகளை அரசு வழங்கி வருகிறது. மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில் மாற்றுத்திறனாளிகள் தங்களுக்கு 1700 ரூபாய் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் மாதாந்திர உதவித்தொகை உயர்த்தப்பட்டு புதிய அரசாணை ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. இந்த அரசு உத்தரவின்படி மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம் தோறும் வழங்கப்பட்டு வந்த 1,000 ரூபாய் 1,500 ஆக உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டது. விதவைகள் மற்றும் முதியோருக்கு 1,000 ரூபாயிலிருந்து 1,200 வழங்கப்படும் என அரசாணை தெரிவித்திருந்தது.

உதவித்தொகை உயர்த்தி அறிவிக்கப்பட்டதிலிருந்து கடந்த 7 மாதங்களாக வழங்கப்படாமல் இருந்து வருகிறது. இந்நிலையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டவுடன் இந்தத் தொகை உரியவர்களுக்கு வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. மக்களுக்கு தேவையான அனைத்து உதவி திட்டங்களும் முறையாக செயல்படுத்தப்படும் எனவும் அரசு அறிவித்திருக்கிறது.

English Summary:
Govt increased the allowance of senior citizens, widows and physically challenged people. Govt will start distributing soon

Next Post

"பாயிண்ட் வரட்டும் பேசுவோம்".. மத்திய அரசுக்கு எதிராக 'EPS' மௌனம்.! அதிமுகவுக்கு பின்னடைவு.!

Sun Feb 18 , 2024
2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல் தேதிகள் அடுத்த மாதம் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் ஆளும் திமுக அதன் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மேலும் திமுக சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் நபர்கள் நாளை முதல் விருப்பம் மனு தாக்கல் செய்யலாம் எனவும் அறிவித்திருக்கிறது. மேலும் முதலமைச்சர் ஸ்டாலின் பாராளுமன்ற தொகுதிகளில் தேர்தல் குறித்த மாநில உரிமையை மீட்பு […]

You May Like