fbpx

வீங்கிய கண்கள்.. நிறம் மாறிய தோல்.. வினையாக மாறிய தடுப்பூசி..!! அமெரிக்க பெண்ணிற்கு நடந்தது என்ன?

அமெரிக்காவின் புளோரிடா பகுதியைச் சேர்ந்த அலெக்சிஸ் லோரன்ஸ் என்ற 23 வயதான பெண், கலிபோர்னியாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் டெட்டனஸ், நிமோகாக்கல் மற்றும் மூளைக் காய்ச்சலுக்கான தடுப்பூசிகளைப் போட்டுள்ளார்.  தடுப்பூசிகளை எடுத்துக்கொண்ட பத்து நிமிடங்களுக்குப் பிறகு, அவரது உடல்நிலை மிக மோசமடைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீங்கிய கண்கள், பார்வை இழப்பு, வாய் திறக்க முடியாத நிலை, இரத்த கோளாறு, தோல் நிறமாற்றம் உள்ளிட்ட ஆபத்தான அறிகுறிகள் அந்த பெண்ணிடம் தோன்றியது. பின்னர் அந்த பெண் மருத்துவக் காப்பீடு இல்லாததால், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ரத்த மாற்றுச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் தனக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து, சமூக வலைதள பக்கத்தில் வீடியோ பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் பெண்ணின் வீங்க்கிய கண்கள், கருப்பு-ஊதா நிறத்தில் மாறிய தோல், உடல் முழுவதும் சீராய்வு, உடைந்த முடிகள் உள்ளிட்ட தடுப்பூசி எதிர்வினை பாதிப்புகள் காண்போரை கலங்க செய்துள்ளது.

செப்டம்பர் 17 ஆம் தேதி அந்த பெண்ணிற்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவரது ஃபேஸ்புக் பதிவின் படி, அடுத்த நாள் வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளார். இந்த வீடியோவைப் பார்க்கும் பலரும் அவருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பதிவுகளைப் பதிவிட்டு வருகின்றனர். அலெக்சிஸ் லோரென்ஸுக்கு ஏற்பட்ட இந்த நிலைக்கு மருத்துவமனை நிர்வாகமே காரணம் எனவும், தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர்.

Read more ; ’நீங்கள் சாப்பிடும் உணவுகளால் உங்கள் பேரப்பிள்ளைகளுக்கும் ஆபத்து’..!! வெளியான அதிர்ச்சி ஆய்வு முடிவுகள்..!!

English Summary

Severe Vaccine Reaction Makes 23-Year-Old US Woman Unrecognizable; Reports Say She Is Fighting For Her Life

Next Post

இந்தியாவில் ஆணுறைகள் அதிகம் பயன்படுத்தப்படும் மாநிலம் எது தெரியுமா? - WHO வெளியிட்ட அறிக்கை

Fri Sep 20 , 2024
A recent report by the World Health Organization (WHO) reveals a growing trend of having unprotected sex in India.

You May Like