Israel attack: ஜபாலியா அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உட்பட 200 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் திகதி தொடங்கிய இஸ்ரேல், ஹமாஸ் போர் நடவடிக்கை ஓராண்டை கடந்து நடைபெற்று வரும் நிலையில், லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தொடங்கியதில் இருந்து நிலைமையை மேலும் தீவிரமடைந்து வருகிறது. இந்தநிலையில், இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) வியாழக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாமில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட கிட்டத்தட்ட 200 பேர் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேலிய தாக்குதல்களில் ஆறு கட்டிடங்கள் தரைமட்டமாகின. முன்னதாக, புதன்கிழமை இரவு ஹெஸ்பொல்லாவின் தெற்கு பெய்ரூட் கோட்டை மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டதாக லெபனான் அரசு ஊடகம் கூறியது.