தெலங்கானா மாநிலத்தில் கோலாட்டம் ஆடிக்கொண்டிருந்த பெண் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சங்கரப்பட்டினம் பகுதியில் நடந்த திருவிழாயொட்டி பெண்கள் வட்டமாக கோலாட்டம் ஆடிக் கொண்டிருந்தனர்.
அப்போது, அதிலிருந்து பெண் ஒருவர் திடீரென குப்புற கீழே விழுந்தார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் பதறியடித்துக் கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பால் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.