உலக நாயகன் கமல்ஹாசனின் சகோதரரும் பிரபல நடிகருமான சாருஹாசன் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
1931ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி பரமக்குடியில் பிறந்தவர் தான் சாருஹாசன். 1986ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான தபரன கதே படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார். 93 வயதிலும் நல்லா ஆக்டிவாக இருந்து வந்த சாருஹாசன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையறிந்த சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அவர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டுமென பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப் போவதாகவும் அதற்கு அவர் தயாராக இருக்கிறாரா என அவரிடமே அவரது செல்ல மகள் சுஹாசினி கேட்க, ரெடி என சாருஹாசன் மருத்துவமனை படுக்கையில் இருந்தபடியே பேசும் வீடியோவை சுஹாசினி வெளியிட்டுள்ளார்.
”தீபாவளிக்கு முந்தைய இரவு திடீரென எங்களுக்கு மிகப்பெரிய சங்கடம் ஏற்பட்டது. அப்பா சாருஹாசன் உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தோம். தீபாவளி முழுக்க இங்கேதான் கழிந்தது. ஆனால், அவர் தற்போது நலமுடன் உள்ளார். அறுவை சிகிச்சை செய்தால் அவர் குணமாகி விடுவார் என மருத்துவர்கள் சொல்கிறார்கள்” என்று சுஹாசினி பதிவிட்டுள்ளார்.
Read More : Gold Rate | செம குட் நியூஸ்..!! இன்று அதிரடியாக குறைந்த தங்கம் விலை..!! நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி..!!