fbpx

Sonakshi Sinha | 7 வருட காதல்.. ஜாகீர் இக்பாலை கரம் பிடித்தார் லிங்கா பட நடிகை!!

தனது நீண்டநாள் காதலரான ஜாகீர் இக்பாலை கரம் பிடித்தார் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா. 

 கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த், அனுஷ்கா, சந்தானம், ராதா ரவி உள்ளிட்ட பலர் நடித்த கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான லிங்கா படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் சோனாக்சி சின்ஹா. இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வரும் சோனாக்‌சி சின்ஹா இந்த ஆண்டு ஹீரமண்டி வெப்சீரிஸ் மற்றும் படே மியான் சோட்டே மியான் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

இந்நிலையில், தனது நீண்ட கால காதலர் ஜாகீர் இக்பாலை இன்று (ஜூன்.23) கரம் பிடித்தார். கடந்த ஏழு ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தநிலையில் இன்று அவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. சோனாக்ஷி சின்ஹா மற்றும் ஜாகீர் இக்பால் இருவரும் 2022 ஆம் ஆண்டு டபுள் எக்ஸ்எல் திரைப்படத்தின் சேர்ந்து நடித்தபோது காதலித்தாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு முன் 2020ம் ஆண்டில் இருந்தே இருவரும் டேட்டிங் செய்யத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. படவிழாக்கள், பொது நிகழ்வுகளில் இருவரும் பல இடங்களில் ஒன்றாக காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மும்பையில் உள்ள சோனாக்சி சின்ஹாவின் இல்லத்தில் கோலாகலமாக திருமண விழா நடைபெற்றது. சோனாக்‌சி சின்ஹா மற்றும் ஜாகீர் இக்பால் இருவரும் வெள்ளை நிற ஜொலிக்கும் உடையை அணிந்துக் கொண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்துக்கு சோனாக்சி சின்ஹாவின் பெற்றோர்கள் சம்மதம் தெரிவிக்காத நிலையில், கடைசியில் திருமணத்தில் சோனாக்‌சி சின்ஹாவின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். 

https://www.instagram.com/p/C8j70RTIkhL/?utm_source=ig_web_button_share_sheet

English Summary

Sonakshi Sinha has tied the knot with her boyfriend Zaheer Iqbal. Both have registered marriages. The couple is soon going to throw a reception party at Shilpa Shetty’s restaurant.

Next Post

இப்படியும் ஒரு கிராமமா..? பெண் குழந்தைகள் பிறந்தால் என்ன செய்வார்கள் தெரியுமா..? சுவாரஸ்ய தகவல்..!!

Mon Jun 24 , 2024
Did you know that there is a village in India that gives birth to a girl child through penance?

You May Like