fbpx

பதான் படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு.. நள்ளிரவில் முதலமைச்சருக்கு போன் செய்த நடிகர் ஷாருக்கான்…

தென்னிந்திய திரைப்படங்கள் தொடர்ந்து இந்திய அளவில் வெற்றி பெற்று வரும் அதே வேளையில் பாலிவுட் படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்து வருகின்றன.. கடந்த ஆண்டு வெளியான ஒரு சில படங்களை தவிர பல பாலிவுட் படங்கள் கடும் தோல்வியை சந்தித்தன.. மேலும் பாலிவுட்டில் புதிய படம் வெளியாகும் போதெல்லாம் அந்த படத்தை புறக்கணிக்கும் படி நெட்டிசன்கள் ஹாஷ்டாக்களை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.. அந்த வகையில் கடந்த சில நாட்களாகவே ஷாருக்கானின் பதான் படத்தையும் புறக்கணிக்கும் படி பதிவிட்டு வருகின்றனர்.. இதனால் #BoycottPathan என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டானது..

இதனிடையே சமீபத்தில் பதான் படத்தில் இடம்பெற்ற ‘பேஷாரம் ரங்’ பாடலை படக்குழு வெளியிட்டிருந்தது.. அதில் தீபிகா படுகோன் காவி நிற பிகினி உடையில் நடனமாடியது சர்ச்சையை ஏற்படுத்தியது.. வலதுசாரிகள் இப்படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்..

இந்நிலையில் அசாம் மாநிலத்தின் நரேங்கி என்ற பகுதியில் உள்ள திரையரங்கு ஒன்றில் நேற்று முன் தினம் பல வலதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர்கள் நுழைந்து, சொத்துக்களை சேதப்படுத்தியதாகவும், ‘பதான்’ போஸ்டர்களை எரித்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து ‘பதான்’ படத்திற்கு எதிரான போராட்டங்கள் குறித்து அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.. அதற்கு பதிலளித்த அவர் ” யார் ஷாருக்கான்..? அவரை பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும்? நம்மிடம் ஏற்கனவே பல ஷாருக்கான்கள் உள்ளனர்? ‘பதான்’ என்ற பெயரில் எந்தப் படத்தைப் பற்றியும் நான் கேள்விப்பட்டதில்லை, அதற்கான நேரமும் எனக்கு இல்லை..

சட்டம் ஒழுங்கை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால், இதுவரை திரையரங்க உரிமையாளர்கள் தரப்பிலிருந்தோ, படத்தின் தயாரிப்பு தரப்பிடம் இருந்தோ எனக்கு எந்த புகாரும் வரவில்லை. ஷாருக்கானே என்னை அழைத்து பேசினால், நான் விஷயத்தை கவனிப்பேன்,” என்று தெரிவித்தார்..

இந்நிலையில் நடிகர் ஷாருக்கான் தன்னை தொலைபேசியில் அழைத்து பேசியதாக அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தொலைபேசியில் என்னை அழைத்தார்.. நாங்கள் இன்று அதிகாலை 2 மணிக்கு பேசினோம். அவர் தனது படத்தின் திரையிடலின் போது கவுகாத்தியில் நடந்த சம்பவம் குறித்து கவலை தெரிவித்தார்.. சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிப்பது மாநில அரசின் கடமை என்று நான் அவருக்கு உறுதியளித்தேன். நாங்கள் விசாரித்து இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் பார்த்துக் கொள்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார்..

Maha

Next Post

#Breaking : ஈரோடு இடைத்தேர்தலில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டி... காங்கிரஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..

Sun Jan 22 , 2023
2021- சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.. அதன்படி அங்கு காங்கிரஸ் கட்சி சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா வெற்றி பெற்று எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டார்.. இதனிடையே கடந்த 4-ம் தேதி திருமகன் ஈவெரா மாரடைப்பால் காலமானார். இதைத்தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.. இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை […]

You May Like