fbpx

அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை பெற 30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…! முழு விவரம் உள்ளே..‌.

தொழிற்‌ படிப்பு பயிலும்‌ சேலம்‌ மாவட்டத்தில்‌ உள்ள முன்னாள்‌ படைவீரர்களின்‌ சிறார்கள்‌ கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்க கால அவகாசம்‌ நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌, வெளியிட்ட செய்தி குறிப்பில்; மத்திய முப்படை வீரர்‌ வாரியத்தின்‌ பாரத பிரதம மந்திரி கல்வி உதவித்தொகை கோரி 2022-2023 -ஆம்‌ ஆண்டு தொழிற்‌ படிப்பு பயிலும்‌ முன்னாள்‌ படைவீரர்களின்‌ சிறார்களுக்கு கல்வி உதவித்தொகை கோரி விண்ணப்பிக்க 30:11.2022 வரை கால அவகாசம்‌ நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும்‌ விவரங்களுக்கு சேலம்‌ மாவட்ட முன்னாள்‌ படைவீரர்‌ நல அலுவலகத்தினை 0427 – 2902903 என்ற தொலைபேசி எண்ணில்‌ தொடர்பு கொண்டு பயன்பெறலாம்‌ என மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

சென்னையில் மட்டும் 2.6 லட்சம் போலி வாக்காளர்கள் கண்டுபிடிப்பு!!!

Mon Nov 28 , 2022
சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 38.83 லட்சம் பேர். சென்ற 2021 ஆண்டு 3.2 லட்சம் போலி வாக்காளர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர். அவர்களில் 2 லட்சம் பேர் வரை நீக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து போலி வாக்காளர்களை அடையாளம் காண தேர்தல் ஆணையம் புதிய மென்பொருளை உருவாக்கியது. இதை பயன்படுத்தி போலி வாக்காளர்களை கண்டுபிடிக்கும் பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. மேலும் போட்டோ […]

You May Like