fbpx

ரயில் பயணிகளுக்கு சூப்பர் நியூஸ்..!! உணவு குறித்து புதிய அறிவிப்பை வெளியிட்ட IRCTC..!!

நவராத்திரிக்காக விரதம் இருக்கும் பயணிகளுக்கென ஸ்பெஷல் உணவு ஒன்றை ஐ.ஆர்.சி.டி.சி அறிமுகப்படுத்தியுள்ளது.

ரயிலில் தினமும் ஏராளமானோர் பயணம் செய்கின்றனர். குறிப்பாக வெளியூர் செல்ல நீண்ட தூரம் பயணம் செய்ய ரயில் போக்குவரத்தை மக்கள் அதிகம் தேர்தெடுக்கின்றனர். ஏனெனில் மற்ற சேவைகளை விட ரயில் சேவை கட்டணம் குறைவு. அனைத்து வசதிகளும் அதில் உள்ளது. பயணிகள் விருப்பத்திற்கு ஏற்ப ஏசி பெட்டி, நான்-ஏசி பெட்டி, படுக்கை வசதி என தேர்ந்தெடுத்து பயணிக்கின்றனர்.

ரயில் பயணிகளுக்கு சூப்பர் நியூஸ்..!! உணவு குறித்து புதிய அறிவிப்பை வெளியிட்ட IRCTC..!!

இந்நிலையில், நவராத்திரிக்காக விரதம் இருக்கும் பயணிகளுக்கென ஸ்பெஷல் உணவு ஒன்றை ஐ.ஆர்.சி.டி.சி அறிமுகப்படுத்தியுள்ளது. வீரட் தாலிஷ் என்ற பெயரில் வழங்கப்பட இருக்கின்ற இந்த உணவில் வெங்காயம் மற்றும் பூண்டு இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 400 ரயில் நிலையங்களில் ஐ.ஆர்.சி.டி.சி சார்பில் ரயில் பயணிகளுக்கு இந்த உணவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே ரயில்வே துறையில் ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ உள்ளிட்ட அதிவிரைவு ரயில்கள் புறப்பட 2 மணி நேரத்திற்கு மேல் தாமதமானால் பயணிகளுக்கு உணவு இலவசமாக வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..

Wed Sep 28 , 2022
சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ரூ.37,000-க்கு விற்பனையாகிறது.. உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.. இந்நிலையில் தங்கம் விலை […]

You May Like