fbpx

மதுரை நெல் கொள்முதல் நிலையத்தில் வேலை.. 450 காலிப்பணியிடங்கள்..!! விண்ணப்பிக்க ரெடியா..?

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிக கழகம், மதுரை மண்டலத்தில் நெல் கொள்முதல் பருவகால பணிக்கு 450 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியிடங்கள் : பருவகால பட்டியல் எழுத்தர், பருவகால உதவுபவர் மற்றும் பருவகால காவலர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

வயது வரம்பு : இப்பணியிடங்களுக்கு 01.07.2024 தேதி படி, எஸ்சி, எஸ்டிஏ மற்றும் எஸ்டி பிரிவினருக்கு 37 வயது வரையும், எம்பிசி, பிசி மற்றும் பிசி(எம்) ஆகிய பிரிவுகளுக்கு 34 வயது வரையும், ஒசி பிரிவில் 32 வயது வரையும் இருக்க வேண்டும். உரிய விதிகளின்படி, அரசால் நிர்ணயிக்கப்பட்ட வயது தளர்வுகள் அனுமதிக்கப்படும்.

கல்வி தகுதி : பருவகால பட்டியல் எழுத்தர் பதவிக்கு இளங்கலை அறிவியல், வேளாண்மை மற்றும் பொறியியல் பட்டம் முடித்திருக்க வேண்டும். பருவகால உதவுபவர் பதவிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பருவகால காலவர் பதவிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : எழுத்தர் பதவிக்கு ரூ.5,285, உதவுபவர் பதவிக்கு ரூ.5,218 மற்றும் காவலர் பதவிக்கு ரூ.5,218 ஆகியவை வழங்கப்படும். மேலும், கூடுதலாக கொடுப்பனைகள் வழங்கப்படுகிறது.

விண்ணப்ப படிவத்தை துணை ஆட்சியர், மண்டல மேலாளர், த.நா.நு.பொ.வா.கழகம், லெவல் 4 பில்டிங், 2-வது தளம், BSNL வளாகம், தல்லாகுளம், மதுரை – 625 002 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 28.02.2025 மாலை 5 மணி ஆகும். நேர்முகத் தேர்வு பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more : பிளாஸ்டிக் லஞ்ச் பாக்ஸ்ல மதிய உணவு கொண்டு போறீங்களா..? உயிருக்கே ஆபத்து.. உடனே தவிர்த்திடுங்க..!!

English Summary

Tamil Nadu Consumer Goods Trading Corporation has released notification for 450 vacancies for rice procurement seasonal work in Madurai zone.

Next Post

இந்தியாவில் எந்த மாநிலத்தில் பெண்கள் அதிகம் மது குடிக்கிறார்கள் தெரியுமா..? ஷாக் ரிப்போர்ட்

Sun Feb 16 , 2025
Alcohol Consumption: Wow.. Do so many women drink alcohol in Telangana? Shocking facts in the survey

You May Like