திமுகவின் 3 ஆண்டு கால ஆட்சியில் ரூ 3,198 கோடியில் 28,824 அடுக்குமாடி குடியிருப்புகள் திறந்து வைக்கப்பட்டு வீடற்ற மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மேலும் இதன் காரணமாக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் புதிய சாதனை படைத்துள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுவரை 37,720 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் மக்கள் தாமாக வீடுகட்டும் திட்டத்தின் கீழ் ரூ.2,078.37 கோடியில் 69,071 தனி வீடு காட்டவும் ஒப்புதல் அழிக்கப்ட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் தாமாக வீடு கட்டும் திட்டத்தில் 1,66,495 துணை வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
7,582 சிதலடைந்த குடியிருப்புகள் இடித்து அதே இடத்தில் புதிய வீடுகள் ரூ.1608 கோடியில் பணிகளை நடந்து வருவதாகவும், ஏற்கனவே கட்டிய குடியிருப்புகளின் உறுதித்தன்மையை அதிகரிக்க ரூ.59.08 கோடியில் பழுது நீக்கம் பனி முடிக்கப்பட்டுள்ளதாகவும், 31,233 குடியிருப்புகளுக்கு கட்டமைப்பு வசதியை ரூ.82.57 கொடியில் மேம்படுத்தும் பணிகள் நடந்து வருவதாகவும், நகர்ப்புற மக்களின் திறன்களை மேம்படுத்தும் வகையில், 4,771 பேருக்கு திறன் மேம்பட்டு பயிற்சியும் அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.