விருதுநகர் மாவட்டத்தின் நல்வாழ்வு சங்கத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி விருதுநகர் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் 4 காலி பணியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. அந்த அறிவிப்பின்படி விருதுநகர் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் மருத்துவ பணியாளர் பணிக்கு 2 காலியிடங்களும் வாகன ஓட்டுனர் பணிக்கு 1 காலியிடமும் துப்புரவாளர் பணிக்கு ஒரு காலியிடமும் உள்ளது. இவற்றை நிரப்புவதற்காக தகுதியான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பின்படி மருத்துவப் பணியாளர் வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வாகன ஓட்டுனர் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதோடு கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். துப்புரவு பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மருத்துவப் பணியாளர் பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு மாத ஊதியமாக ரூ.8,500/- வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டுநர் பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ஊதியமாக ரூ.13,500/- வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்புரவு பணியாளர் வேலைக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ஊதியமாக ரூ.8,500/- வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் 40 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 07.04.2023 ஆகும். இந்த வேலை வாய்ப்பிற்கே விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை அஞ்சல் மூலமாகவோ அல்லது நேரிலோ செயற் செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும்
துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வாளகம், விருதுநகர் மாவட்டம்-825001 இந்த முகவரியில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வேலை வாய்ப்பினைப் பற்றிய பிரபலங்களை அறிய viruthunagar.nic.in என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.