fbpx

அவசர அழைப்பு விடுத்த பாஜக தலைமை!… இன்று டெல்லி விரையும் அண்ணாமலை!

பாஜக தலைமை விடுத்த அவரச அழைப்பை தொடர்ந்து தமிழக தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி செல்கிறார்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை ‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் பாத யாத்திரை நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். சென்னையில் வருகிற 11-ந்தேதி நடைபயணம் மேற்கொள்கிறார். இதில் பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பங்கேற்கிறார். அண்ணாமலையின் இந்த யாத்திரை நிறைவு விழா வருகிற 25-ந்தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசுகிறார். அண்ணாமலை தனது நடைபயணத்துக்கு மத்தியிலும் தமிழகத்தில் பா.ஜனதா தலைமையில் வலுவான கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த சூழ்நிலையில் அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அவசர அழைப்பு விடுத்துள்ளார். அதன்பேரில் அண்ணாமலை இன்று டெல்லி புறப்பட்டு செல்கிறார். அங்கு மத்திய அமைச்சர் அமித்ஷா, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரை சந்தித்து பேசுகிறார். இதற்கிடையே டெல்லியில் பா.ஜனதா தேசிய தலைவர் கே.பி. நட்டாவை அ.தி.மு.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 18 பேரும், தி.மு.க. முன்னாள் எம்.பி. ஒருவரும் சந்தித்து, பா.ஜனதாவில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Kokila

Next Post

ஓபிஎஸ்-க்கு அடித்த ஜாக்பாட்..!! பாஜக கூட்டணியின் போட்டியிடும் தொகுதிகள்..!! ராஜ்யசபா சீட் கன்பார்ம்..!!

Wed Feb 7 , 2024
பாஜக கூட்டணியில் போட்டியிடும் ஓபிஎஸ் அணிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாஜக கூட்டணியில் ஓபிஎஸ் அணி இணைந்து போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. என்னதான் அவர் நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவேன் என்று கூறினாலும், அவருக்கு தாமரை சின்னத்தில் போட்டியிட 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது தேனி, மதுரை மற்றும் […]

You May Like