fbpx

வீட்டிலேயே சுகப்பிரசவம் பார்த்த தம்பதி ….

அறுவை சிகிச்சையை விரும்பாத தம்பதி வீட்டிலேயே சுகப்பிரசவம் பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை அருகே எருக்கூரைச் சேர்ந்தவர்கள் ஜான்-பெல்சியா தம்பதியினர். பெல்சியா கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு கர்ப்பமானார். அனைவரும் எப்படி மாதந்தோறும்  மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்கள் அறிவுரைப்படி சிகிச்சை எடுப்பார்களோ அதே போல இவரும் சிகிச்சை எடுத்துள்ளார். அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தற்போது இரண்டாவது முறையாக பெல்சியா கருவுற்றிருந்தார். இரண்டாவது குழந்தையும் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றெடுக்க அவர் விரும்பவில்லை. ஆனால் முதல் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிறந்ததால் இரண்டாவது குழந்தையையும் அவ்வாறுதான் எடுக்க முடியும் என தெரிவித்துள்ளனர். இதை அவர்கள் விரும்பவில்லை. எனவே வீட்டிலேயே சுகப்பிரசவம் பார்க்க அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றினர்.

மருந்து மாத்திரை சாப்பிடாமல் இயற்கையாகவே தேவையானதைசாப்பிட்டு உடலைத் தயார் செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று பெல்சியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அதனால் தம்பதி ஏற்கனவே முன்னேற்பாடுகளை செய்து வைத்திருந்தனர். சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது.

அப்போதுதான் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது உயிருக்கு ஆபத்து என பதறி அடித்துக் கொண்டு வந்தனர். குழந்தை பிறந்திருந்த நிலையில் அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்ல மறுத்துவிட்டனர்.

எனவே நேற்று மாலை குழந்தை பிறந்த நிலையில் இரவு 10.30க்குத்தான் நஞ்சுக்கொடி வெளியானது. இதற்காக பல மணி நேரம் காத்திருந்த தம்பதி ’’ நினைத்தபடி அறுவை சிகிச்சை இன்றி குழந்தை பிறந்ததால் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Post

நடுக்கடலில் கருணாநிதி பேனா நினைவுச்சின்னம் – தமிழக அரசுக்கு சுற்றுலாத்துறை அமைச்சகம் கடிதம்..

Wed Oct 5 , 2022
கடலுக்கு நடுவில் கருணாநிதியின் பேனா நினைவுச் சின்னம் அமைப்பது குறித்து , தமிழக அரசிற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல்துறை கடிதம் அனுப்பியுள்ளது. ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி நடைபெற்ற மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை சுட்டிக் காட்டி தமிழக பொதுப்பணித்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. போன நினைவுச் சின்னம் அமைப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டுக்கு ஆற்வறிக்கையை தயாரிக்க தமிழக அரசுக்கு சுற்றுச்சூழல் […]

You May Like