fbpx

பிரிந்து சென்ற மனைவி…, போஸ்டர் அடித்து மானத்தை வாங்கிய முன்னாள் கணவர்….! மனைவி எடுத்த அதிரடி முடிவால் கம்பி என்னும் நபர்…!

விழுப்புரம் அருகே, தன்னை விட்டு பிரிந்து சென்று, வேறொரு நபரை திருமணம் செய்து கொண்டு, வாழ்ந்து வந்த மனைவியின் மீது இருந்த கோபம் காரணமாக, அவரைப்பற்றி தரக்குறைவாக ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டிய கணவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், தக்கா தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன்(42) இவருக்கும், கோலியனூர் பகுதியைச் சேர்ந்த விஜி என்பவருக்கும் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்று உள்ளது. இதற்கு நடுவில், கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு மற்றும் கருத்து வேறுபாடு போன்றவை ஏற்பட்டு வந்துள்ளன. இதனால், விஜி ஒரு அதிரடி முடிவை கொண்டார். அதாவது கடந்த 2021 ஆம் வருடம் தன்னுடைய கணவரை விட்டு பிரிந்து சென்ற அவர், கோலியனூர் பகுதியைச் சேர்ந்த கன்னியப்பன் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு, அவருடன் வாழ்ந்து வந்தார்.

இதன் காரணமாக, மனைவியின் மீது கடும் கோபம் அடைந்த வெங்கடேசன், தன்னுடைய மனைவியை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்று முடிவு செய்தார். அதற்காக அவர் முன்னெடுத்த முயற்சி தான் தற்போது அவரை கம்பி என்னும் அளவிற்கு கொண்டு சென்று விட்டுள்ளது.

அதாவது, விழுப்புரம், கோலியனூர் போன்ற பகுதிகளில், விஜி என்பவர், வெங்கடேசனை திருமணம் செய்து 25 வருடங்கள் ஆகி, அனு, அம்மு என்ற இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கின்றன. அதேபோல, பேரன், பேத்திகளும் இருக்கின்றனர். ஆனால், இவர் சமீப காலமாக என்னிடம் இருந்த சுமார், 20 சவரன் நகை, 15 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு சென்று, கோலியனூர் பகுதியைச் சேர்ந்த கன்னியப்பன் என்பவரோடு, உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் எனவும், தன்னுடைய உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் குறிப்பிட்டு போஸ்டர் அடித்து ஓட்டியுள்ளார்.

இந்த விவகாரம், விழுப்புரம் மற்றும் கோலியனூர் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, விஜி, வளவனூர் காவல் நிலையத்தில் புகார் வழங்கியிருக்கிறார். அந்த புகாரின் அடிப்படையில், வெங்கடேசன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Next Post

BOB வங்கியில் வேலைவாய்ப்பு அறிமுகம்…! ரூ.15,000 மாத ஊதியம்…! விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்...!

Sun Sep 10 , 2023
பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Business Correspondent Supervisors பணிகளுக்கு என 3 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 65 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.10,000 முதல் 15,000 வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக […]

You May Like