fbpx

நாட்டை உலுக்கும் பயங்கரம்!… பேஸ்புக் நேரலையில் முக்கிய நபர் சுட்டுக்கொலை!

மும்பையில் பேஸ்புக் நேரலையில் உத்தவ் அணிசிவசேனா கட்சியைச் சேர்ந்தவரின் மகன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தவ் அணிசிவசேனா கட்சியைச் சேர்ந்தவர் வினோத் கோசல்கர். முன்னாள் எம்எல்ஏ. இவரது மகன் அபிஷேக் கோசல்கர். இவர், மும்பையின் தஹிசார் பகுதியில் நேற்று, மொரிஸ் பாய் எனப்படும் மொரிஸ் நோரோன்ஹாவுடன் பேஸ்புக் நேரலை நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சி முடிந்ததும், மொரிஸ் கேமராவை விட்டு நகர்ந்து சென்ற நிலையில், திடீரென அவர் துப்பாக்கியால் அபிஷேக் கோசல்கரை சரமாரியாக சுட்டார். இந்த பயங்கர காட்சிகள் பேஸ்புக்கில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டன.

தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயமடைந்த அபிஷேக்கை மருத்துவமனையில் சேர்த்தனர். அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். மொரிஸ் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு சமீபத்தில்தான் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர். கொலைக்கான காரணம் தெரியவில்லை. மொரிஸ், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேக்கு நெருக்கமானவர் என கூறப்படுகிறது.

Kokila

Next Post

வாகன ஓட்டிகளே குட் நியூஸ்...! ஜி.பி.எஸ் அடிப்படையிலான கட்டண வசூல்...! மத்திய அமைச்சர் நிதின் கட்கரி...

Fri Feb 9 , 2024
புவி ஊடுருவல் செயற்கைக்கோள் அமைப்பு அடிப்படையிலான தடையற்ற சுங்கவரி வசூல் போன்ற புதிய தொழில்நுட்பங்களை அமல்படுத்துவதற்கான ஆலோசனை சேவைகளை வழங்க ஒரு ஆலோசகரை அரசு நியமித்துள்ளது. முதற்கட்டமாக ஜிஎன்எஸ்எஸ் அடிப்படையிலான மின்னணு சுங்கவரி வசூல் முறையை தேசிய நெடுஞ்சாலைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரிவுகளில் முன்னோடித் திட்டமாக எஃப்ஏஎஸ் குறியீட்டுடன் கூடுதல் வசதியாக செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முழுமையடையாத கேஒய்சி- உடன் பாஸ்டாக் பயனர்களை ஆர்பிஐ வழிகாட்டுதல்களின்படி […]

You May Like