2024-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் ஒரு இஸ்லாமிய நாடான ஐக்கிய அரபு அமீரகத்தின் பாஸ்போர்ட் (UAE Passport) உலகின் மிகவும் சக்திவாய்ந்த பயண ஆவணமாக பெயரிடப்பட்டுள்ளது.
Arton Capital வெளியிட்ட உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) முதலிடம் பிடித்துள்ளது. தற்போது, UAE பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் 180 நாடுகளுக்கு பயணம் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தை தொடர்ந்து, ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து ஆகிய நாடுகள் கூட்டாக இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளன. இந்த நாடுகளின் குடிமக்கள் 178 நாடுகளுக்குச் செல்ல விசா தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றை தொடர்ந்து, ஸ்வீடன், பின்லாந்து, லக்சம்பர்க்(Luxemberg), ஆஸ்திரேலியா மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் கடவுச்சீட்டுகள் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளன, அதை வைத்திருப்பவர்கள் விசா இல்லாமல் 177 நாடுகளுக்கு பயணம் செய்யலாம். மேலும், பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள பெல்ஜியம், போர்ச்சுகல், போலந்து, அயர்லாந்து மற்றும் தென் கொரியாவின் பாஸ்போர்ட்டில் 176 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.
5வது இடத்தில் சிங்கப்பூர், கிரீஸ், செக் குடியரசு, ஐக்கிய இராச்சியம், ஹங்கேரி, ஜப்பான் மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் பகிர்ந்து கொண்டன. இதன் குடிமக்கள் 175 நாடுகளுக்கு விசா இல்லாமல் பாஸ்போர்ட்டைக் காட்டி நுழையலாம். இந்தப் பட்டியலில், இலங்கை 85-வது இடத்தில் உள்ளது. இலங்கை பாஸ்ப்போர்ட்டில் 57 நாடுகளில் Visa-Free Entry அல்லது Visa-On-Arrival வசதி உள்ளது. இந்தியாவின் பாஸ்போர்ட் உலகளவில் 66 வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் 24 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், பாகிஸ்தான் பாஸ்போர்ட் 93வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் பாஸ்போர்ட்டில் 47 நாடுகளில் விசா இல்லாமல் பயணிக்க முடியும். பாகிஸ்தானுக்கு கீழே சோமாலியா (95வது இடம்), ஈராக் (96வது இடம்), ஆப்கானிஸ்தான் (97வது இடம்) மற்றும் சிரியா (98வது இடம்) உள்ளன. தற்போது, இதனுடன் ஒப்பிடும் போது, ஏமன் (93வது), வங்காள தேசம் (92வது), லிபியா மற்றும் பாலஸ்தீனம் (91வது), சூடான், எரித்திரியா மற்றும் ஈரான் (90வது) ஆகிய நாடுகள் பாகிஸ்தானை விட சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளை பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.